தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்
3/23/2016 2:55:43 PM
தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் நேற்று மாலை தாம்பரம் தொகுதி பாஜ சார்பில், வாக்குச்சாவடி வாரியாக பொதுமக்களிடம் ‘பாஜவுக்கு ஏன்வாக்களிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும் தாம்பரம் தொகுதி பொறுப்பாளருமான செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்தாம்பரம் தொகுதி முழுவதும் வரும் சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுதாக்கலுக்கு முன், பொதுமக்களை 3 முறை பாஜ நிர்வாகிகள் நேரில் சந்திக்கின்றனர். முதல் முறை, ‘ஏன் பாஜவுக்கு வாக்களிக்க வேண்டும்?’ என்றும், ‘பாஜ ஆட்சியில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட உள்ளது.
2-வது கட்ட சந்திப்பில், பாஜ ஆட்சியில் தாம்பரம் தொகுதியில் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தவும், மக்கள் சேவைகளை குறிக்கோளாக கொண்ட உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் மற்றும் உரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.கடைசியாக 3-வது முறை பொதுமக்களை சந்திக்கும்போது, தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் வார்டுவாரியாக உள்ள குறைகளை எப்படி நிவர்த்தி செய்வோம் என்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, அனைத்து வாக்காளர்களின் கருத்துகளையும் கேட்க உள்ளோம் என தாம்பரம் தொகுதி பாஜ நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.