ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?
3/23/2016 2:52:26 PM
ஆலந்தூர்: சென்னை ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி லீலாவதி (54).இவர் இன்று அதிகாலை 4 மணியளவில் கழிவறை செல்வதற்காக வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது வீட்டு வெளிப்புற மதில்சுவரில் ஒரு உருவம் ஏறி. அவரதுவீட்டு மாடியில் குதித்தது. அது பார்ப்பதற்கு சிறுத்தை புலி போலிருந்ததால், தனது கணவரை எழுப்பி தகவல் கூறினார்.அவர் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தபோது, எந்த உருவமும் அவரது கண்ணுக்கு தெரியவில்லை. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சுந்தர்ராஜன் தகவல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, அப்பகுதியில் அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். எனினும், அந்த உருவம் அவர்களுக்கு தென்படவில்லை. வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பதாக போலீசார் கூறினர்.
can i take xyzal in the morning
canitake.net can i take xyzal in the morning