கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்
3/23/2016 2:02:51 PM
கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.கும்மிடிப்பூண்டியை அடுத்த எலாவூர், ஏழு கல் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் தேர்தல் அதிகாரி மணி தலைமையில் போலீசாரும் அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லூரில் இருந்து சென்னைக்கு செல்லும் கார் ஒன்றில் கணக்கில் வராத ரூ. 5 லட்சம் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், காரில் வந்த சாய்பிரசாத் ரெட்டியிடம் போலீசார் விசாரித்தனர்.அப்போது, சாய்பிரசாத் ரெட்டி தனது குடும்பத்தினருடன் சென்னையில் துணிமணிகள் வாங்குவதற்கு பணத்தை எடுத்து செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருந்ததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சாய்பிரசாத்திடம் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அனுப்பி வைத்தனர்.