இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய்க்கு ரூ. 5 கோடி சொத்து

3/22/2016 2:22:45 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

கவுகாத்தி: அசாம் முதல்வர் தருண் கோகாய் மற்றும் அவரது மனைவி டோலி ஆகியோரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.5 கோடி என தெரிவித்துள்ளனர்.அசாமில் முதல்வர் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது நான்காவது முறையாக திட்டபார் தொகுதியில் போட்டியிட தருண் கோகாய் மனு தாக்கல் செய்துள்ளார்.  மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது  மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தருண் கோகாய் மற்றும் அவரது மனைவி டோலி கோகாய் ஆகியோரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.99 லட்சத்து 83 ஆயிரத்து 739 என குறிப்பிடப்பட்டுள்ளது.  

பாஜ சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான சர்வானந்த சோனாவால் அசையும் சொத்து மதிப்பு ரூ.70 லட்சத்து 44 ஆயிரத்து 919 என குறிப்பிடப்பட்டுள்ளது. சோனாவால் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. தருண் கோகாயின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.49 லட்சத்து 95 ஆயிரத்து 022. அவரது மனைவி டோலியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.49 லட்சத்து 88 ஆயிரத்து 717 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்கில் உள்ள பணம், இன்சூரன்ஸ் பாலிசிகள், அஞ்சலக சேமிப்புகள், பங்கு பத்திரங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

பாஜ முதல்வர் வேட்பாளரான சோனாவால் மஜூலி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது அசையும் சொத்தின் மதிப்பு ரூ.70 லட்சத்து 44 ஆயிரத்து 919. இவருக்கு வங்கியில் மட்டும் ரூ12 லட்சத்திற்கும் அதிகமான பணம் டெபாசிட்டில் உள்ளது. அதே போல் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 500 பங்கு வைத்துள்ளார்.தருண் கோகாய் மற்றும் டோலியின் டெல்லி மற்றும் கவுகாத்தியில் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 4 கோடியே 25 லட்சம் ஆகும். சோனாவாலின் அசையா சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் என்றும், கவுகாத்தி மற்றும் திப்ருகாரில் இவரது பரம்பரை சொத்து மற்றும் பரிசாக கிடைத்த சொத்துகளாகும்.

மேலும் தருண் கோகாய் மற்றும் டோலிக்கு சொந்தமாக கவுகாத்தியில் ரூ.75 லட்சம் மற்றும் ரூ.30 லட்சத்தில் நிலம் உள்ளது.மேலும் கவுகாத்தியில் பெல்டோலா என்ற இடத்தில் முதல்வருக்கு சொந்தமாக ரூ.1 கோடியே 15 லட்சத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றும், டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் ரூ. 2கோடியே 5 லட்சம் மதிப்பில் பிளாட் ஒன்றும் உள்ளது.சோனாவாலுக்கு பரம்பரை சொத்தாக திப்ருகாரில் இருக்கும் சொத்தின் மதிப்பு ரூ.30 லட்சம். கவுகாத்தியில் ஜோதி குச்சி என்ற இடத்தில் ரூ.30 லட்சத்தில் நிலம் உள்ளது. அதே போல் ரூ55 லட்சத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றும் சோனாவாலுக்கு சொந்தமாக உள்ளது.தருண் கோகாய் மற்றும் அவரது மனைவி டோலிக்கு கடன் என்ற வகையில் ரூ.16 லட்சத்து 20 ஆயிரத்து 397 உள்ளது. அதே போல் சோனாவாலுக்கு ரூ. 2 லட்சத்து 92 ஆயிரம் உள்ளது.

மேலும் சில
  • திருப்பதி கோயிலில் 7,18ல் கருட சேவை உற்சவம்



  • கோவா வந்த கெஜ்ரிவாலுக்கு அரசு செலவிட்டது ₹500 - சட்டப்பேரவையில் ருசிகரம்



  • மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் - காங். ஆதரவு அளித்தால் நிறைவேறும்



  • உனா சம்பவத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி - 4ம் தேதி குஜராத் பயணம்



  • குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் ராஜினாமாவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் - கெஜ்ரிவால் சொல்கிறார்



  • அபு ஜிண்டால் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் - ஆயுத கடத்தல் வழக்கில் மும்பை ஐகோர்ட் உத்தரவு



  • புதுவையில் மீண்டும் வணிகர் திருவிழா - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு



  • மோடியின் வாரணாசி தொகுதியில் சோனியா இன்று மாலை பிரசாரம்



  • கேரளாவில் 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த விவகாரம் : பீகார் இளம் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை



  • சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த் : திருப்பதி பஸ்கள் ரத்து: பக்தர்கள் பரிதவிப்பு கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]