இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

நந்திவரம் பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை

3/21/2016 2:44:31 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

கூடுவாஞ்சேரி: சென்னையை அடுத்த நந்திவரத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர், எதிர் பகுதியில் உள்ள 1500 ஏக்கர் விவசாய நிலங்களின் நீர் பாசனத்துக்கு உதவியாக இருந்து வந்தது. இதன்மூலம் காலம் காலமாக விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்து வந்தனர்.அதுமட்டுமல்லாமல் கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கல், நல்லம்பாக்கம், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும் பள்ளி மாணவர்களும் நந்திவரம் ஏரிக்கரை வழியாக கூடுவாஞ்சேரிக்கு சைக்கிள் மற்றும் பைக்குகளில் பயணம் செய்து வந்தனர்.இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரி நிரம்பி வழிந்தது. இதைக் கண்டதும் ஏரி ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ஆக்கிரமிப்பாளர்களும் சில சமூகவிரோதிகளும் 3 இடங்களில் வெடிகுண்டு வைத்து ஏரிக்கரையை தகர்த்தனர்.

இதனால் ஏரி உடைந்து, அதில் தேங்கியிருந்த மழைநீர் வீணாக வெளியேறியது. தற்போது பெரிய ஏரி தண்ணீரின்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் சோகத்தில் உள்ளனர். இங்கு வெடி வைத்து தகர்க்கப்பட்ட ஏரிக்கரையை போலீஸ் உயரதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் என பல்வேறு துறை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டனர். அதன் பின்னர் ஏரிக்கரை சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆனால், இந்த ஏரிக்கரையை சரிவர சீரமைக்காமல் அரைகுறையாக அமைத்துவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர். இதனால் ஏரிக்கரை வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ஏரிக்கரையை உடனடியாக பலப்படுத்தி தரவேண்டும். ஏரிக்கரையை சரிவர சீரமைக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சில
  • தொழில்முனைவோர்கள் முன்வந்தால் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை



  • தரங்கம்பாடியில் மீன்பிடித்துறைமுகம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்



  • காயமடைந்த பெண்ணுக்கு ₹10 லட்சம் நிதியுதவி



  • ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு : ஆசிரியர் கழகம் தீர்மானம்



  • வடசென்னை பாஜ சார்பில் சுரக்‌ஷா இலவச காப்பீட்டு முகாம்



  • இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா



  • மேட்டூர் நீர்மட்டம் 59 அடி



  • திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்



  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]