தமிழகம் முழுவதும் அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு
3/17/2016 3:47:00 PM
வேலூர்: கடந்த 2006ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தியபின், 10ம் வகுப்பிலும் அறிவியல் செய்முறைகள் அமல்படுத்தப்பட்டதால், உயர்நிலைப்பள்ளிகளுக்குஅறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டியது அவசியமானது என்று அரசு உத்தரவிட்டிருந்தது.இதில் கடந்த 4 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டட பணிகளே இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் ஆய்வக வசதி உள்ள உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை அரிதாகவே இருந்து வருகிறது. ஒருசில பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளில் தற்காலிக ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அனைத்து மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளிலும், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் தேவைப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
can i take xyzal in the morning
read can i take xyzal in the morning