இயக்குனர் மீது ஜீவா உர்...
3/17/2016 3:37:55 PM
கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கோ’ படத்தில் நடித்தார் ஜீவா. புதிய படம் இயக்குவதற்கு தயாராகி உள்ளார் கே.வி.ஆனந்த். இப்படத்தில் ஜீவாவை நெகடிவ் வேடத்தில் பயன்படுத்த உள்ளதாக கூறி இருந்ததால் அதை எதிர்பார்த்து காத்திருந்தார். இதற்கிடையில் பல்வேறு ஹீரோக்களை சந்தித்த ஆனந்த், விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல அவருக்கு பிடிக்கவே நடிப்பதாக கூறினார். ‘ஆண்டவன் கட்டளை’ படம் முடியும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார் விஜய் சேதுபதி. ஆனந்த்தும் காத்திருந்தார். தன்னிடம் கூறாமல் விஜய் சேதுபதியை ஆனந்த் நடிக்க ஒப்பந்தம் செய்ததில் ஜீவாவுக்கு வருத்தமாம். அதே சமயம், இதில் விஜய் சேதுபதிதான் ஹீரோ. அவருக்கு எதிர்மறையான வேடத்தில் ஜீவா நடிப்பார் என ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால் இது பற்றி தன்னிடம் எதுவும் டைரக்டர் சொல்லவில்லை என கோபம் அடைந்துள்ளாராம் ஜீவா.