செல்ஃபி மோகத்தால் ஏற்படும் பிரச்னையை விளக்கும் கதையில் மானஸா
3/15/2016 3:10:25 PM
செல்ஃபி மோகத்தால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி அலசுகிறது ‘சண்டிக் குதிரை’ படம். இதுபற்றி இயக்குனர் கூறியது:விஞ்ஞான வளர்ச்சியில் நன்மை, தீமை கலந்து இருக்கிறது. மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட செல்போன் இன்று வேறு பரிமாணத்துக்கு மாறிவிட்டது. செல்ஃபி மோகத்தில் விளையும் பிரச்னைகள்தான் திரைக்கதையின் முக்கிய அம்சம். புதுக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. காமெடி கலந்த திகில் கதையாக இது உருவாகிறது. நாயகனாக ராஜ்கமல் நடிக்க நாயகியாக மானஷா நடிக்கிறார். கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வீரா ஒளிப்பதிவு. பாடல்-இசை வாரஸ்ரீ. சன்மூன் கம்பெனி தயாரிப்பு.இவ்வாறு இயக்குனர் கூறினார்.