விவசாயி தற்கொலை நிதி நிறுவன மேலாளர் மீது வழக்கு திமுக நிதியுதவி
3/14/2016 3:03:31 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ஒரத்தூரை சேர்ந்த விவசாயி அழகர், தனியார் நிதி நிறுவனம் டிராக்டரை ஜப்தி செய்ததால் அவமானமடைந்து கடந்த 10ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். விவசாயி அழகர் இறப்புக்கு காரணமான தனியார் நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கயர்லாபாத் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், சம்மந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது பிரிவு 306-தற்கொலைக்கு தூண்டுதல், பிரிவு 506-அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தல், பிரிவு 147- கும்பலாக வந்து தாக்குதல், பிரிவு 294பி-தகாத வார்த்தைகளால் திட்டுதல், பிரிவு 623- கையால் அடித்தல், பிரிவு 34ஐபிசி- வாகனத்தை அத்துமீறி எடுத்துச் செல்லுதல் ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திமுக நிதியுதவி: விவசாயி அழகரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிவசங்கர் எம்எல்ஏ இன்று ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.