இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என ஆயிரம் பேருக்கு கிடா விருந்து அதிமுக நிர்வாகி ‘காதுகுத்து’

3/14/2016 3:01:55 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

சேலம்: சேலம் மாவட்ட அரசு வழக்கறிஞராக இருப்பவர் தனசேகரன். இவர் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளராக இருக்கிறார்.  அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எம்.பி. வேட்பாளர் சீட் இவருக்கு கிடைக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது.அதே நேரத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மாவட்ட அரசு பொறுப்பு வழக்கறிஞராக பணியாற்றி  வந்தார். கடந்த மாதம் தான் அவர் நிரந்தர அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று அவரது வீட்டில் ஆயிரம் பேருக்கு திடீரென கிடா  விருந்து வழங்கியது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது பேரனின் காதுகுத்து விழா என அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியது: மாவட்ட அரசு வழக்கறிஞராக  நியமிக்கப்பட்டுள்ள தனசேகரன், இதனை கொண்டாடும் வகையில் கிடா விருந்து வழங்கினார். மேலும் அவரது பேரனின் காது குத்து விழாவையும் ஒன்றாக  வைத்திருந்தார்.தற்போது சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு இந்த கிடா விருந்தை வைத்ததாக  நினைக்கிறோம். இந்த விருந்துக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள், எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். மட்டன் பிரியாணி,  சிக்கன் 65, முட்டை, மீன் வறுவல் என அசத்திவிட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் சில
  • 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழக அரசு துரோகத்தை மக்கள் மறக்கமாட்டார்கள் ராமதாஸ் அறிக்கை



  • பீகார் மாநிலத்தில் முழுமதுவிலக்கு அமல் முதல்வருக்கு வைகோ பாராட்டு



  • கண்ணியம் குறையாமல் பரப்புரை செய்ய வேண்டும் பாமக பேச்சாளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்



  • கவர்னர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா யுகாதி வாழ்த்து



  • காரணைப்புதுச்சேரியில் சிறுத்தை தாக்கி மான் பலி



  • சீட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த சில கட்சிகளுக்கு கதவடைப்பு ஜெயலலிதா நாளை முதல் பிரசாரம்



  • திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் தொகுதிகள் அறிவிப்பு



  • அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை



  • பேன், குடிநீர், ஓய்வறையுடன் அமைகிறது குமரியில் 24 மாதிரி வாக்கு சாவடிகள்



  • நாளை முதல் பிரசாரம் துவங்க ஜெ.உத்தரவு வேட்பாளர்கள் மாற்றத்தால் அதிமுகவினர் குழப்பம்



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]