மீஞ்சூர் அருகே மணல் திருடிய 3 டிராக்டர்கள் பறிமுதல்
3/14/2016 2:46:12 PM
பொன்னேரி: சென்னை அருகே மீஞ்சூரை அடுத்த பள்ளிப்புரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றில் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் நேற்று கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு போலீசாரைக் கண்டதும் மணல் திருடிக் கொண்டிருந்தவர்கள் 3 டிராக்டர்களையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த 3 டிராக்டர்களையும்போலீசார் பறிமுதல் செய்து, மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.மேலும் மணல் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்களின் உரிமையாளர்கள் யார், யார்? மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.