மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் பிரபுதேவா
3/9/2025 3:12:15 PM
தமிழில் கடந்த 2004ம் ஆண்டு ‘எங்கள் அண்ணா’ படத்தில் நடித்தார் பிரபு தேவா. அதன்பிறகு அவர் நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ திரைக்கு வராமல் நீண்ட நாட்களாக பெண்டிங்கில் உள்ளது. ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தவர் பின்னர் இயக்குனராக கவனம் செலுத்தினார். இந்தி படங்களை இயக்கச் சென்றவர் நடிப்பிலிருந்து ஒதுங்கியே இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க வருகிறார் பிரபுதேவா. இப்படத்தை விஜய் இயக்குகிறார்.
மீண்டும் நடிப்பது பற்றி பிரபுதேவா கூறும்போது,’நடிப்பதை ரொம்பவும் குறைத்துக் கொண்டிருக்கிறேன். திகில் படமொன்றை இயக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது இப்படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறுகிறது. திகில் படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் முறை. இதில் தாடி வைத்துத்தான் நடிக்கிறேன் ஆனால் வித்தியாசமான தோற்றமாக இருக்கும். காஸ்டியூம், ஹேர் ஸ்டைலும் முற்றிலுமாக மாற்றப்படுகிறது’ என்றார்.தமிழ் தவிர தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிரபுதேவாவே இப்படத்தை தயாரிக்கிறார். தற்போது புனேயில் படப்பிடிப்பு நடக்கிறது. கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.