இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

தஞ்சை, திருவானைக்காவல், பிரகதீஸ்வரர் கோயில்களில் இன்று விடிய விடிய மகா சிவராத்திரி திருவிழா

3/7/2025 2:41:12 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

திருச்சி: பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று மாசி மகாசிவராத்திரியையொட்டி சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இரவு 11மணிக்கு முதல் ஜாமம், 1மணிக்கு 2ம் ஜாமம், 3மணிக்கு 3ம் ஜாம அபிஷேகங்களும், அலங்காரங்களும் வழிபாடுகளும் நடைபெறும். 3ம் கால நிறைவில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருவார்கள், நிறைவாக 4ம் ஜாம பூஜை அதிகாலை 5மணிக்கு நடைபெறும். சிவராத்திரியையொட்டி இன்றிரவு முழுவதும் கோயில் நவராத்திரி கலைவிழா அரங்கில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும்.

இரவு 8மணி முதல் தீட்சை பெற்ற சிவனடியார்கள், கோயில் கொடிமரமண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபம், 3ம் பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் சிவபூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்.ஓமாந்தூர்: மண்ணச்சநல்லூர் அடுத்த ஓமாந்தூரில் அன்ன காமாட்சியம்மன், மாசி பெரியண்ண சுவாமி திருக்கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. ஜோதி வழிபாடு மட்டுமே இங்கு நடைபெறும். மேலும், இக்கோயில் வளாகத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் திருநீறாக பக்தர்களுக்கு வழங்கப்படுவது மிகவும் சிறப்பானது. பாரம்பரியமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தி திதி, திருவோண நட்சத்திரம் கூடிய புண்ணிய காலத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்தாண்டுக்கான மகா சிவராத்திரியையொட்டி இன்று காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடு துவங்கியது. கோயிலில் உள்ள 64 பதிவுகளிலும் பெரிய பூசாரி தேவராஜ் ஜோதி ஏற்றி வழிபாட்டை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் மற்றும் சவுதாரி அம்மனுக்கு நள்ளிரவு பொங்கல் வைத்து நிவேதனம் படைக்கப்படுகிறது. பின்னர், நாளை (8ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு நாச்சியாரம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க சீர் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். 64 புது பானைகளில் செய்யப்பட்ட சுண்டல் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். அத்துடன் பேய் ஓட்டும் சடங்கும் நடைபெறும். உடுக்கு அடித்து பேய் விரட்டும் பூசாரிகள், குறி சொல்வோர், கிளி ஜோதிடம் பார்ப்போர், கைரேகை நிபுணர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.

இங்கு வந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி திருநீராக கோயில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசினால் ஆண்டு முழுவதும் அவர்கள் தொழில் சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவசுவாமி கோயில் உட்பட அனைத்து சிவாலயங்களில் நள்ளிரவு நான்கு ஜாமங்களிலிலும் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறஉள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு ஓமாந்தூர், திருவானைக்காவல் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.தஞ்சை: தஞ்சை பெரியகோயில் உள்பட அனைத்து சிவாலயங்களிலிலும் நான்கு ஜாம பூஜைகள் விடிய விடிய நடைபெற உள்ளது.அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு ஜாமபூஜைகள் நடைபெற உள்ளது.

மேலும் சில
  • தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா தேர்களை தோளில் தூக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்



  • செங்குன்றத்தில் அங்காளஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா



  • திருவள்ளூர் சிவ- விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணி தாயார் கும்பாபிஷேகம்



  • கொண்டத்து காளியம்மன் குண்டம் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்



  • மயிலாப்பூர் பெயர் எப்படி வந்தது?



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்படும் அறுபத்து மூவர் திருவிழா



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • கோடிநீர்வாழி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் விழா



  • சிவன்மலை கோயிலில் ஆண்டவன் உத்தரவில் உப்பு ‘ஏதாவது மாற்றம் வருமாம்’



  • நள்ளிரவு சுடுகாட்டில் மயான கொள்ளை எரியும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்ட மருளாளி திருச்சி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]