அகதியாக மாறிய டாப்ஸி
3/7/2025 2:37:49 PM
அகதி வேடத்தில் நடிப்பதுபற்றி டாப்ஸி கூறியது:ராணாவுடன் ‘காஸி’ இந்தி படத்தில் நடிக்கிறேன். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை கதையான இதில் அகதியாக நான் வேடம் ஏற்கிறேன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றேன். அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் அமெரிக்கா சென்றேன். நியூயார்க்கில் சுற்றி திரிந்து பொழுதை கழித்ததுடன் உலக வர்த்தக மையம், லிபர்ட்டி சிலை என முக்கிய இடங்களுக்கு சென்று ரசித்தேன். என்னால் முடிந்தளவுக்கு பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் அங்கு பார்த்துவிட்டேன். இதையடுத்து மறக்க முடியாத அனுபவமாக ஷாப்பிங் அமைந்தது.இந்த சந்தோஷத்துடன் மற்றொரு சந்தோஷம் அமிதாப்பச்சனுடன் விரைவில் புதிய இந்தி படத்தில் நடிக்க உள்ளேன்.இவ்வாறு டாப்ஸி கூறினார்.