இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஒரு பக்கம் மட்டும் ஜெராக்ஸ் எடுத்ததால் மாணவியின் தலை முடியை கொத்தாக பிய்த்த ஆசிரியர் -வேலூர் அரசு பள்ளியில் கொடூரம்

3/3/2025 2:56:43 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

நாட்றம்பள்ளி, -பள்ளி மாணவியின் தலைமுடியை கொத்தாக பிய்த்து எடுத்த ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வேட்டப்பட்டு ஊராட்சி ஜல்லியூரான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி(40). இவர் பீடி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு 3மகள்கள் உள்ளனர். 3வது மகள் சங்கவி(15). நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்த கணேசன். இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி சங்கவியை அழைத்து புத்தகம் ஒன்றை ஜெராக்ஸ் எடுத்து வரும்படி கூறியுள்ளார். மாணவியும் கடைக்கு சென்று ஜெராக்ஸ் எடுத்து வந்துள்ளார்.

ஒரு பக்கம் மட்டும் ஜெராக்ஸ் எடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ‘ஏன் ஒரு பக்கம் மட்டும் ஜெராக்ஸ் எடுத்துள்ளாய், மீதம் உள்ள இரண்டு பக்கத்தையும் ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டியதுதானே, இதுகூட தெரியாமல் ஏன் நீ பள்ளிக்கு வருகிறாய்’ என்று திட்டி மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். மாணவி தலையின் முன்பகுதியில் இருந்த தலைமுடி கொத்தாக ஆசிரியரின் கையில் வந்துள்ளது. வலியால் துடித்த மாணவி, மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள், உடனடியாக மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.இதுகுறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம். தலைமுடி இல்லாத இடத்தை மறைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு ஆசிரியர்கள் கூறியதாக தெரிகிறது. மாலையில் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்



  • தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்



  • பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு



  • அதிமுகவுடன் கூட்டணியா? மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி



  • இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி



  • தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நகைப்புக்குரிய நிகழ்வு: பாமக



  • கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இடம் தேமுதிக உறுதி என வைகோ தகவல்



  • ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?



  • மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் எப்ஐஆர்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]