இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிரசார கூட்டம் நடக்கும் இடங்களில் மது விற்பனை அதிகரிக்காவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை

3/3/2025 2:56:17 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

கோவை, -பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்காவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள 6,826 டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் தினமும் பல கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இந்த நிலையில், மதுபான விற்பனையை 3 மடங்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 வகையான மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு வர முடிவு  செய்துள்ளனர். இதன்படி 88 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலான குறைந்த விலை மதுபாட்டில்களை கடைகளில் 60 சதவீதம் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபாட்டில்கள் தேவை, இருப்பு குறித்து தினமும் ஆய்வு நடத்தி குடோன் நிர்வாகத்திற்கு தகவல் தரவேண்டும், குறைந்த விலை மதுபாட்டில் இல்லை என புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. கடைகளில் பெட்டியை வைக்க கடையை ஒட்டியுள்ள காலி அறைகளில் இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுக்கூட்டம், மாநாடு மற்றும் கட்சி தலைவர்கள் பிரசாரத்தின்போது சம்பந்தப்பட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளில் மது விற்பனை 20 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.  மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மது விற்பனை உச்சத்தை எட்டாவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் சூபர்வைசர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சில
  • வித்யா மந்திர் பள்ளிக்கு ஆதரவாக 15 அடி ஆக்கிரமித்து லஸ் சர்ச் சாலையில் நடைபாதை பூங்கா அமைக்கும் பணி ரத்து மக்கள் போராட்டத்தால் மாநகராட்சி பணிந்தது



  • தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு மே 1ம் தேதி துணை ராணுவம் வருகை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்



  • தேமுதிக, பாமகவுடன் ஏற்கனவே பேசிவிட்டோம் முடிவை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • சட்டசபை தேர்தல் நேரத்தில் மது விற்பனையை அதிகரிக்க இயக்குநர் தலைமையில் இன்று ஆலோசனை: டாஸ்மாக் முறைகேடுகளை தடுக்க ஐவர் குழு



  • காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி



  • வெளிநாட்டில் பறிமுதல் செய்து வங்கி கணக்கில் பிரதமர் மோடி செலுத்திய பணத்தை தரவேண்டும் : அடம் பிடித்த முதியவரால் பரபரப்பு



  • விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவதால் ஆம்புலன்சில் வந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதினார் மாணவர்



  • பெரம்பலூரில் நடந்த விபத்தில் சென்னை போலீஸ்காரர் பலி



  • ரூ. 4.84 கோடியில் டேனிஷ் கோட்டை புதுப்பிப்பு



  • கார் மோதி 2 விவசாயிகள் பலி



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]