இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திகார் சிறையில் கைதிகள் பயங்கர மோதல் 2 பேர் பலி, அதிகாரி உள்பட 6 பேர் காயம்

10/8/2025 2:40:13 PM
நாக்கில் சைத்தான் குடியிருக்கிறது என பேசியதற்கு பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மோடி மீது லாலு பாய்ச்சல் சுஷ்மா நாளை மாலத்தீவு பயணம்

புதுடெல்லி: திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 கைதிகள் கொல்லப்பட்டனர். துணை கண்காணிப்பாளர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். டெல்லியில் உள்ள திகார் சிறை இந்தியாவில் உள்ள சிறைகளில் மிக முக்கியமானதாகும். மத்திய அரசுக்கு எதிராக குற்றங்கள் புரிபவர்கள் சிபிஐயால் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் தான் அடைக்கப்படுவார்கள். இதனால் இங்கு பாதுகாப்பு மிகவும் பலமாக இருக்கும். சொந்த மாநில போலீஸ் என்றால் பாதுகாப்பில் அலட்சியம் இருக்கும் என தமிழக போலீசார் இங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே இங்கு நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் தலா ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது.ஈஷ்வர் சிப்பி என்ற பயங்கர குற்றவாளி தலைமையில் ஒரு கும்பலும், அனில் சவுத்ரி என்பவன் தலைமையில் மற்றொரு கும்பலும் திகார் சிறையில் இயங்கி வந்தது. இதில் அனிலின் நெருங்கிய நண்பன் ஒருவரை ஈஷ்வர் கும்பல் கடந்த ஆண்டு சிறையில் வைத்து தீர்த்து கட்டியது. இதனால் ஈஷ்வரை பழிவாங்க அனில் துடித்துக் கொண்டிருந்தான். இரண்டு கும்பலுக்கும் உள்ள விரோதத்தால் இவர்களை தனித்தனி வார்டுகளில் காவலர்கள் அடைத்து வைத்திருந்தனர். நேற்று மதியம் ஈஷ்வருக்கு கண்ணில் வலி ஏற்பட்டது.

இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனகைகு காவலர்கள் அவனை அழைத்து வந்தனர். ஈஷ்வருடன் அவனது கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் துணையாக இருந்தனர். சிகிச்சை முடிந்து தனது வார்டுக்கு ஈஷ்வர் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அனில் கும்பல் தங்கள் சிறை வார்டனை அடித்து உதைத்து கதவை திறந்து கொண்டு ஈஷ்வர் மீது பாய்ந்தது. இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடும் சண்டை மூண்டது. டீஸ்பூன், பிரஷ் ஆகியவற்றை கூராக தீட்டி அவற்றை ஆயுதங்களாக மாற்றி இரு தரப்பு கடுமையாக தாக்கிக் கொண்டது. அவர்களை தடுக்க துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர்கள் முயன்றனர். சண்டை நடப்பதை அறிந்து கூடுதல் காவலர்கள் அங்கு விரைந்தனர்.

அரை மணி நேர போராட்டதுக்கு பின்னர் அங்கு சண்டை ஓய்ந்தது. ஈஷ்வரும், அனிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இரு கும்பலை சேர்ந்த4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. கண்காணிப்பாளர் மற்றும் ஒரு காவலருக்கும் காயம் ஏற்பட்டது. கைதிகள் இறந்த சம்பவம் அவர்களது உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை சிறைக்கு முன் திரண்ட உறவினர்கள் சிறை காவலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை தொடர்பாக டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

மேலும் சில
  • கர்நாடகாவில் அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33%



  • நாக்கில் சைத்தான் குடியிருக்கிறது என பேசியதற்கு பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மோடி மீது லாலு பாய்ச்சல்



  • சுஷ்மா நாளை மாலத்தீவு பயணம்



  • திருப்பதி கோயிலில் வரும் 14ம் தேதி நவராத்திரி பிரமோற்சவம் துவக்கம்: ஆர்ஜித சேவைகள் ரத்து



  • இந்திய விமானப் படை



  • சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட்கள் பலி : பாதுகாப்பு படையினர் அதிரடி



  • உள்நாட்டு போர் விமானங்களை பயன்படுத்த இந்திய விமானப்படைக்கு மோடி உத்தரவு



  • லாலு பிரசாத்திடம் கருப்பு பணம் பாஜ தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு



  • அரசு விளம்பரங்களில் பிரதமர் படம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு



  • பீகாரில் பிரதமர் மோடி பிரசாரம் : 4 இடங்களில் பேசுகிறார்



Facebook

Twitter

ரகுல் ப்ரீத் சிங் சம்பளம் திடீர் உயர்வு பயத்தில் நடிகை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]