இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

புதிய கால அட்டவணை வெளியீடு...நாளை முதல் அமல்.. பல ரயில்களின் நேரம் மாறுகிறது

9/30/2015 2:40:00 PM
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ க.சுந்தர் அழைப்பு டெல்டாவில் இருந்து 5 லட்சம் விவசாயிகள் வெளியேறி உள்ளனர்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

சென்னை: தெற்கு ரயில்வே உள்ளடக்கிய தென் மண்டலத்திற்கான புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.அக்.1 முதல் வருகைபுறப்படும் நேரம் மாற்றப்பட்ட ரயில்களின் விவரம் :

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்:

சென்னை சென்ட்ரலில் இருந்து இனி தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.25 மணிக்கு பதில் அதிகாலை 2 மணிக்கும், கவுகாத்தி-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கவுகாத்தி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை அதிகாலை 4.45 மணிக்கு பதில் அதிகாலை 4.55 மணிக்கும்,  சென்னை-விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 7.30 மணிக்கு பதிலாக காலை 7.35 மணிக்கும்,  சென்னை  -சந்திரகாசி எக்ஸ்பிரஸ் காலை 7.55 மணிக்கு பதிலாக காலை 8.10 மணிக்கும், சென்னை - ஊப்ளி எக்ஸ்பிரஸ், சென்னை - வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ் ஆகியவை பகல் 1.50 மணிக்கு பதில் 1.45 மணிக்கும், சென்னை - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் பகல் 2.10 மணிக்கு பதில் 2.15 மணிக்கும், சென்னை - ஆல்டியா எக்ஸ்பிரஸ், சென்னை- அசன்ேசால் எக்ஸ்பிரஸ் ஆகியவை பகல் 2.35 மணிக்கு பதில் 2.40 மணிக்கும், தர்பங்கா-மைசூர் எக்ஸ்பிரஸ், பாடலிபுத்திரம் -யஸ்வந்த்புரம் எக்ஸ்பிரஸ்  ஆகியவை பகல் 2.40 மணிக்கு பதில் பகல் 2.45 மணிக்கும், பெங்களூர் - பாட்னா சங்கமித்ரை எக்ஸ்பிரஸ் பகல் 3.40 மணிக்கு பதிலாக 3.45 மணிக்கும்  சென்னை-அவுரா வாராந்திர  எக்ஸ்பிரஸ் மாலை 5.10 மணிக்கு பதிலாக மாலை 5.20 மணிக்கும், சென்னை - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ்  மாலை 6.15 மணிக்கு பதில் மாலை 6.20 மணிக்கும், சென்னை-மங்களூர் மெயில் இரவு 8.15 மணிக்கு பதில் இரவு 8.20 மணிக்கும், சென்னை- பழனி எக்ஸ்பிரஸ் இரவு 9.30 மணிக்கு பதிலாக இரவு 9.40 மணிக்கும், சென்னை-அவுரா மெயில் இரவு 11.40 மணிக்கு பதிலாக இரவு 11.45 மணிக்கும், கொரக்பூர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பரோனி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், இந்தூர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோர்பா-திருவனந்தபுரம ்எக்ஸ்பிரஸ் ஆகியவை   இரவு 11.45 மணிக்கு பதிலாக இரவு 11.50 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும்.

சென்னை  சென்ட்ரலுக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றம்:

சென்னை சென்ட்ரலுக்கு இனி தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ்  அதிகாலை 2.55 மணிக்கு பதிலாக 1.55 மணிக்கும்,  அவுரா- சென்னை மெயில் அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக அதிகாலை 3.45 மணிக்கும், கவுகாத்தி -பெங்களூர், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகாலை 4.20 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கும், பெங்ளூர் - சென்னை மெயில்  அதிகாலை 4.40 மணிக்கு பதிலாக அதிகாலை 4.45 மணிக்கும், புதுடெல்லி-சென்னை ஜிடி எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணிக்கு பதிலாக காலை 6.20 மணிக்கும், கோவை-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகியவை காலை 7.15 மணிக்கு பதிலாக காலை 7.20 மணிக்கும், ஜோலார்பேட்டை-சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ்  காலை 9.15 மணிக்கு பதிலாக காலை 9.10 மணிக்கும்,  விசாகப்பட்டினம்-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 9.35 மணிக்கு பதிலாக காலை 9.30 மணிக்கும்,  பிகானீர்-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 9.55 மணிக்கு பதிலாக காலை 10.10 மணிக்கும் ஜம்முதாவி(வைஷ்ணவிதேவி)-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 10.10 மணிக்கு பதிலாக காலை 10.20 மணிக்கும், திருவனந்தபுரம்-சென்னை ஏசி ரயில் காலை 10.30 மணிக்கு பதிலாக காலை 10.35 மணிக்கும், பிட்ரகுண்டா-சென்னை பாசஞ்சர் ரயில் பகல் 12 மணிக்கு பதிலாகபகல் 12.35 மணிக்கும், லோக்மான்யதிலக்(மும்பை) - சென்னை எக்ஸ்பிரஸ் காலை 1.05 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், பாட்னா-பெங்களூர் சங்கமித்ரை எக்ஸ்பிரஸ்  பகல் 3.05மணிக்கு பதிலாக 3.15 மணிக்கும், மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ்  மாலை 4.45 மணிக்கு பதிலாக 4.30 மணி்க்கும், நாகர்சோல்-சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 4.15 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கும், அகமதாபாத் - சென்னை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் மாலை 5.05 மணிக்கு பதிலாக5.10 மணிக்கும்,  அவுரா- சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 5.15 மணிக்கு பதிலாக 5.20 மணிக்கும்,  பெங்களூர்- சென்னை   இரண்டு அடுக்கு ஏசி ரயில் இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும், திருப்பதி-சென்னை சப்தகிரி எக்ஸ்பிரஸ் இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.45 மணிக்கும் வந்து சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்:

சென்னை எழும்பூரில் இருந்து இனி  சென்னை-கயா  எக்ஸ்பிரஸ்  காலை 7.30 மணிக்கு பதிலாக  காலை 7 மணிக்கும், புதுச்சேரி-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் , ராமேஸ்வரம்-மந்துதீன் எக்ஸ்பிரஸ் ஆகியவை  பகல் 1.15 மணிக்கு பதிலாக பகல் 1.00 மணிக்கும்,  சென்னை-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் பகல் 3.15 மணிக்கு பதிலாக பகல் 3.10 மணிக்கும், பகத்-கி-கோதி(ஜோத்பூர்)-மன்னார்குடி  எக்ஸ்பிரஸ் இரவு 7.55 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கும் புறப்படும்.

சென்னை எழும்பூர் வந்து சேரும் ரயில்களின் நேரம் மாற்றம்:

சென்னை எழும்பூருக்கு இனி  காச்சிகுடா-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 7.15மணிக்கு பதிலாக காலை 7.25 மணிக்கும், புதுச்சேரி-புதுடெல்லி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-மந்துதீன் எக்ஸ்பிரஸ் பகல் 1.00 மணிக்கு பதிலாக பகல் 12.40 மணிக்கும மன்னார்குடி- பகத்-கி-கோதி எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக இரவு 7.25 மணிக்கும், அவுரா-திருச்சி எக்ஸ்பிரஸ், அவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவை இரவு 7.55மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கும், புதுச்சேரி-சென்னை எக்ஸ்பிரஸ் இரவு 8.30 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கும்,  கயா-சென்னை எக்ஸ்பிரஸ் இரவு 8.45 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும், காரைக்கால்-லோக்மான்யதிலக்(மும்பை) எக்ஸ்பிரஸ் இரவு 10.10 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கும் வந்து சேரும்.

மேலும் சில
  • நெடுவாசல் போராட்டம் 125வது நாளை எட்டியது



  • காரில் கடத்திய 850 ‘குவார்ட்டர்’ பாட்டில் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது



  • காவிரி புதைமணலில் சிக்கி இன்ஜி. மாணவர்கள் பலி



  • திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடி பரணி விழா: பக்தர்கள் காவடி



  • மதுரை மேலூரில் இன்று மாலை தினகரன் அணி கூட்டம் முக்கிய அறிவிப்பு வெளியீடு?



  • அதிமுகவில் கடும் குழப்பமான சூழ்நிலையில் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு



  • ஆர்எம்டி பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா



  • மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் செய்த உதவி என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி



  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்



  • இலங்கை கடற்படை அட்டூழியம்: வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]