இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: அதிமுக நகராட்சி தலைவர் கார் மோதி 3 பேர் பலி

9/28/2015 2:32:02 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பைக் மீது குடியாத்தம் நகராட்சி தலைவரின்  கார் மோதியதில் 2 வாலிபர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.  தப்பிய கார் டிரைவரை போலீசார் தேடுகின்றனர். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் லோகேஷ் (24). ரெட்டேரியை சேர்ந்தவர் சீனிவாசன்(25). நண்பர்கள்  இருவரும் நேற்று மாலை வேலை நிமித்தமாக வேலூர் நோக்கி புறப்பட்டனர். லோகேஷுக்கு சொந்தமான பைக்கில் இருவரும் சென்றனர். இரவு 9  மணி அளவில் காஞ்சிபுரம் ஏனாத்தூர் அருகே செல்லும் போது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். முதியவர் மீது மோதாமல்  இருக்க லோகேஷ் பிரேக் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் பின்னால் அதிவேகத்தில் வந்த குடியாத்தம் நகராட்சி தலைவர் அமுதா சிவபிரகாசத்தின் கார் கட்டுப்பாட்டை  இழந்து பைக் மீது பயங்கரமாக ேமாதியது. சாலையை கடக்க முயன்ற முதியவர் மீதும் மோதி நின்றது. இதில் லோகேஷ், சீனிவாசன் மற்றும்  சாலையை கடக்க முயன்ற முதியவர் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காரை சாலையில் நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பினார். நகராட்சி தலைவர் அமுதா  சிவபிரகாசம் அதிமுகவை சேர்ந்தவர்.

இந்த கார் சென்னையில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்ற வாகன  ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்படி காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சாரதி, எஸ்ஐ கண்ணன், போலீசார்  சம்பவ இடத்துக்கு விரந்தனர். பின்னர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது  தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தப்பிய கார் டிரைவரை தேடுகின்றனர். இறந்த முதியவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்த முதியவர் காஞ்சிபுரம் அடுத்த நெல்லூர் கிராமத்தை சேர்ந்த தனபால்(66), விவசாயி என்பது தெரிந்தது.

மேலும் சில
  • இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை



  • கோட்டையில் முதல்வர் செல்ல இருந்த பாதையில் பெட்ரோல் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயற்சி



  • அக்.8ம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்



  • உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா? கழிவறையில் சத்தம் கேட்டதால் பரபரப்பு



  • சென்னை வர்த்தக மையம் ரூ.298 கோடியில் விரிவாக்கம்



  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



  • சென்னை ஆர்.கே. நகரில் கலை அறிவியல் கல்லூரி



  • ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி ஒருவர் கைது; காவல்நிலையம் முற்றுகை



  • பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு



  • கழிவறைக்குள் தோழி விளையாட்டாக அடைத்து வைத்தபோது 6 வயது சிறுமி பரிதாப பலி; பள்ளி முற்றுகை



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]