இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மதுரை அருகே கோயிலில் ருத்ராட்ச மரம் கண்டுபிடிப்பு

9/28/2015 2:19:29 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

திருப்புவனம்: மதுரை அருகே குன்னத்தூரில் உள்ள கோயிலில் ருத்ராட்ச மரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதுபற்றி கேள்விப்பட்டதும் ஏராளமான மக்கள் வந்து மரத்தை வணங்கி செல்கின்றனர். மதுரை அருகே வரிச்சியூரில் இருந்து சக்குடி கிராமம் செல்லும் வழியில் குன்னத்தூர் கிராமம் உள்ளது. இங்கு தொல்லியல் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அஸ்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. குடவறை கோயிலான இக்கோயில் மேற்கு நோக்கி உள்ளதால் அஸ்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.கிபி 8ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயிலில் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். குன்னத்தூரை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன.

கோயிலில் கருவறை மற்றும் முன்புறம் மண்டபம் அமைந்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் 5க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மரங்களை பற்றி யாருக்கும் எந்த விபரம் தெரியவில்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மரங்களில் காய் காய்க்க ஆரம்பித்தது. என்ன காய் என தெரியாமல் மக்கள் தவித்தனர். அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர் இது ருத்ராட்ச மரம் என்றும், அதிலுள்ள காய் ருத்ராட்சம் என்றும், நேபாள நாட்டில்தான் இந்த மரம் அதிகளவில் உள்ளது, தமிழகத்தில் எப்படி வளர்ந்து காய்த்தது என்றும் தெரியவில்லை’ என்றார்.

இந்த தகவல் பரவியதால் ஏராளமான மக்கள் வந்து மரத்தை வணங்கினர். காய்களை பறித்து சென்றனர். தற்போது மரத்தில் ஓரு சில ருத்ராட்ச காய்களை உள்ளது.‘ருத்ராட்ச மரம் உள்ளதால் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மரங்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சில
  • அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பைக்கில் வந்த 4 பேர் கும்பலுக்கு வலை



  • திருவண்ணாமலை அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு



  • ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது; காவல்நிலையம் முற்றுகை



  • கார் மீது குண்டுவீச்சு: வியாபாரி பலி



  • காஞ்சிபுரம் அருகே வி.சி. பிரமுகர் வெட்டி கொலை



  • ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தறுத்து கொலை: ரூ.5 லட்சம் பேரம் பேசி கூலிப்படை ஏவி மனைவியே தீர்த்து கட்டியது அம்பலம்



  • சிறுமி 8 மாத கர்ப்பம் பெற்றோர் அதிர்ச்சி: ஆட்டோ டிரைவரிடம் விசாரணை



  • சர்ச்சில் பெண்ணிடம் பர்ஸ் திருடியவர் கைது



  • கம்ப்யூட்டர்கள் வழங்குவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி : திருவள்ளூரில் பதுங்கியவர் கைது



  • கோடிக்கணக்கில் மோசடி அறக்கட்டளை நிர்வாகிக்கு குண்டாஸ்



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]