இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல காங்கிரஸ் : பாஜ மீது பாய்ச்சல்

9/26/2015 12:20:54 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜவை போல காங்கிரஸ் தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல என அதன் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா நிருபர்களிடம் கூறுகையில், மூத்த தலைவர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. மூத்த தலைவர்கள் ஆலோசனை குழுவுக்கு தள்ள வேண்டும் என காங்கிரஸ் கருதுவது கிடையாது.  ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட இளம் தலைவர்களுக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே பூசல் நடப்பதாக கூறப்படுகிறது. அப்படி எதுவும் கட்சிக்குள் கிடையாது. இளைஞர்களும், மூத்தோர்களும் இணைந்து சோனியா, ராகுல் தலைமையில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றார்.

மும்பையில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் அண்மையில் அளித்த பேட்டியில் மூத்த தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்களை செயல்பட விடாமல் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் போட்டு வருகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து கேட்ட போது, இளைஞர்களுக்கு அனுபவம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு பதவி அளிக்கப்படுகிறது. அது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ராகுல் காந்திதான் தலைவர்களை நியமித்தார்.

பஞ்சாபில் மாநில தலைவர் பிரதாப் சிங் பஜ்வாவுக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. பாஜவை போல காங்கிரஸ் தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல என்று மறைமுறைகமாக மோடியை சுர்ஜேவாலா தாக்கினார். மேலும் அவர் கூறுகையில், மூத்த தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கருதவில்லை. பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி போன்றோரை ஆலோசனை குழுவுக்கு அனுப்பியது போல மூத்த தலைவர்களை காங்கிரஸ் ஒரு போதும் நடத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சில
  • ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.11 கோடி...



  • டெல்லி அருகே கிராமவாசி கும்பலால் அடித்து கொலை : வதந்தியால் நேர்ந்த கொடூரம்



  • நவம்பர் 23ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார் மோடி



  • காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி செம்மரம் கடத்தல்: சித்தூர் அருகே போலீசார் சுற்றிவளைத்தனர்



  • குஜராத் மாநிலத்தில் 12 தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை



  • தேர்தல் விதிமுறை மீறல் மோடி மீதான வழக்கு ஒத்தி வைப்பு



  • வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது ஆர்பிஐ வீடு, வாகன கடன் வட்டி குறைகிறது



  • அரியானா மின்வாரியத்தின் அலட்சியம் சாதாரண வீட்டிற்கு ரூ.85 கோடி மின் கட்டணம்: பயனீட்டாளர்கள் அதிர்ச்சி



  • பீகார் தேர்தல் ஒபிசிகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையே வெளிப்படையான போட்டி: லாலு பிரசாத் பிரசாரத்தால் பரபரப்பு



  • படகு கவிழ்ந்து அசாமில் 40 பேர் பலி



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]