கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி
9/5/2025 12:50:19 PM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் நேற்று ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி நகர் தண்டவாளத்தில், நேற்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.இதைக் கண்டதும் கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.ரயிலில் அடிபட்டு இறந்துபோன வாலிபர் வெள்ளை நிற பனியனும், நீலநிற பனியன் கிளாத் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.