நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி
9/5/2025 12:49:45 PM
கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் இயங்கி வரும் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில், ேநற்று கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.சென்னையை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக நிர்வாகிகள் அம்சவல்லி-எம்.எஸ்.ராஜேந்திரனின் 38-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் உள்ள கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் நேற்று கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு ஆதனூர் ஒன்றிய திமுக கவுன்சிலர் மலர்விழி தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் வெங்கடபதி, நந்தகோபால், சந்திரசேகர், ராஜ்மோகன், சத்யநாராயணன், சத்யகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அனைவரையும் சங்க செயலாளர் மைதிலி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் குமணன், முன்னாள் ஆளுநர் மகேஷ், துணை ஆளுநர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரூர் திமுக மகளிரணி அமைப்பாளரும், கோல்டன் சிட்டி சங்கத் தலைவருமான ஆசிரியை அம்சவல்லி மற்றும் பேரூர் இலக்கிய அணி அமைப்பாளரும், பிரைடு சங்க செயலாளருமான எம்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரின் 38-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, நந்திவரத்தில் உள்ள குமரன் நகர் பூங்கா, டிபன்ஸ் காலனி, நடராஜபுரம் ஆகிய பகுதிகளில் 100 மரக்கன்றுகளை அரிமா சங்க நிர்வாகிகள் நட்டனர்.பின்னர், அப்பகுதியை சேர்ந்த ஏழைகளுக்கு 25 கிலோ அரிசி, பள்ளி மாணவர்களுக்கான எழுதுபொருட்களை திருமண நாளை கொண்டாடும் தம்பதியர் வழங்கி சிறப்புரையாற்றினர்.இவ்விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் பாலகுரு, பாலாஜி உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டன.