இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு

9/5/2025 12:36:55 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

புதுடெல்லி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று அறிவிப்பை வெளியிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்து மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் இன்று மாலை 3 மணிக்கு இந்த திட்டத்தை அறிவிப்பார். இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஏராளமான ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய  அரசு இன்று அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013 ஏப்ரல் மாதத்திலிருந்து திட்டத்தை நிறைவேற்றுவதுடன், நிலுவை தொகையை மொத்தமாக கணக்கிட்டு கொடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.

இது தொடர்பாக ஒரு நபர் கமிஷன் ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது. திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து 6 மாதங்களுக்குள் இந்த கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் கூறுப்படுகிறது.தற்போதைய கணக்கின்படி 24.25 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூ பெற்ற ராணுவ வீரர்களும், சுமார் 6 லட்சம் ராணுவ வீரர்கள் குடும்பத்தினரும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்துக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.54 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட வேண்டியிருக்கும். 85 சதவீத ராணுவ வீரர்கள் 40 வயதுக்கு முன்பே ஓய்வு பெற்று விடுகின்றனர். வெறும் 1 சதவீத ராணுவ வீரர்கள் மட்டுமே 60 வயதில் ஓய்வு பெறுகின்றனர். தற்போது 13 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பணியில் உள்ளனர். கடந்த ஆட்சியின் போது இந்த திட்டத்தை நிறைவேற்ற அப்போதைய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியது. ஆனால் இதை நிறைவேற்ற இயலவில்லை. நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் போராட்டம் தற்போது ஜந்தர் மந்தரில் 90வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று மாலை மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சில
  • ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது



  • தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்



  • குடும்பத்தினருடன் செல்லும் போது மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை ரத்து



  • மகாராஷ்டிராவில் நகராட்சி வரி நீக்க கோரி பெட்ரோல் டீலர்கள் 7ம் தேதி முழு அடைப்பு போராட்டம்



  • அசாம் அரசியலில் பரபரப்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜவில் சேர்ந்தனர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்



  • டெல்லி, பெங்களூரு ஏர்போர்ட்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை உள்பட நாடு முழுவதும் உஷார்



  • திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி பக்தர்கள் பாதுகாப்புக்காக 3120 கேமரா பொருத்தப்படும் அதிகாரி தகவல்



  • இறந்த பெற்றோர் உடலுக்கு அருகில் 2 நாட்களாக தவித்த ஒரு வயது குழந்தை: ஐதராபாத்தில் சோகம்



  • ரூ. 11 கோடியில் எம்எல்ஏக்களுக்கு 100 சொகுசு கார்கள் காஷ்மீர் முப்தி அரசு முடிவு



  • ஆர்எஸ்எஸ்சிடம் சுருண்ட மத்திய அரசு : மோடி மீது ராகுல் பாய்ச்சல்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]