ஜெர்மனியை சேர்ந்த பிரபல பெண்
9/3/2025 2:13:37 PM
ஜெர்மனியை சேர்ந்த பிரபல பெண் ஓவியர் நடாலி நக்லஸ், எதையும் வித்தியாசமாக வரைவதில் விருப்பம் உள்ளவர். ஒருமுறை எலும்பு கைவிரல்களை ஓவியமாக வரைய விரும்பினார். கடந்த வாரம் தன்னிடம் கறுப்பு மார்க்கர் பேனா மற்றும் பேனாக்களைக் கொண்டு, கறுப்புநிற பின்னணியில், கைவிரல்களில் துண்டாக்கப்பட்ட பகுதிகளைப் போல், ரத்த சிவப்பு கலருடன் வெள்ளை நிற பேனாக்களை சொருகி வைத்தார்.அவை, பார்ப்பதற்கு வெட்டுப்பட்ட கைக்கு நடுவே எலும்பு பகுதி தெரிவது போல் காட்சியளித்தது.பின்னர், அவற்றை தத்ரூபமாக புகைப்படம் எடுத்ததுடன், இணையதளங்களில் நடாலி வெளியிட்டார். அந்த புகைப்படங்களையும் ஓவியத்தையும் பார்த்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆச்சரியத்துடன் ‘லைக்’ போட்டனர்.