இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு : பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை

9/2/2025 1:52:02 PM
மெட்ரோ ரயில் அலுவலகத்தை மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் முற்றுகை வரும் 18ம் தேதி சாலை மறியல் நடத்த முடிவு அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.தொழிலாளர் நல சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளதை எதிர்த்து நாடு முழுவதும் தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தம் இன்று நடை்பெற்று வருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் கூடியது. ஏற்கனவே ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாகவும் மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. இந்த  சூழலில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பருப்பு இறக்குமதியில் ஈடுபடும் பொதுத்துறை நிறுவனங்கள் 15 சதவீத தொகையை மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதி  அளிப்பது தொடர்பாகவும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் தேடும் பணிகளில் தனியாரை அனுமதிப்பது தொடர்பாகவும் மத்திய அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி இல்லத்தில் கூடிய மத்திய அமைச்சரவை இதுகுறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய மாநாட்டு கட்சியின் தொழிற் சங்க தலைவர் சுபாஷ் சாஸ்திரி, பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், கடந்த ஜூலையில் இருந்து நிலுவையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்காக 7 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு வழங்க வேண்டும். தற்போது அதிகரித்துள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • விடிய விடிய நடந்த என்கவுன்டர் காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



  • இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தண்டி யாத்திரை ஹர்தீக் படேலின் அடுத்த வியூகம்



  • மகாராஷ்டிராவில் பயங்கரம் : குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்



  • கர்நாடகாவில் 8 மாதங்களில் 400 விவசாயிகள் தற்கொலை : முதல்வர் சித்தராமைய்யா அதிர்ச்சி தகவல்



  • அசாமில் கனமழைக்கு 6 பேர் பலி: 7 லட்சம் பேர் பாதிப்பு



  • மணிப்பூரில் பதற்றம் அமைச்சர், 5 எம்எல்ஏ வீடு எரிப்பு வன்முறையில் 3 பேர் பலி



  • இட ஒதுக்கீடு போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் : ஹர்தீக் படேல் எச்சரிக்கை



  • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகம்- 5 இடங்களில் சீனிவாச திருக்கல்யாணம்



  • வேலைக்கார பெண்ணை அடித்து சித்ரவதை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி மீது வழக்கு



  • ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை



Facebook

Twitter

சிருஷ்டி டாங்கே முத்தம் ஹீரோ நடுக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]