இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், செரீனா முன்னேற்றம் : நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி

9/1/2025 2:19:57 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

நியூயார்க்:  அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஜப்பான் வீரர் நிஷிகோரி முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு துவங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், பிரேசில் வீரர் ஜாவோ சோசாவுடன் மோதினார். 8 ஏஸ்களை வீசி சோசாவை திணற அடித்த ஜோகோவிச், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7 முறை சோசாவின் சர்வீஸ் கேம்களை முறியடித்த ஜோகோவிச், தனது முதல் சர்வீஸில் 76 சதவீத புள்ளிகளை அள்ளினார். ஜோகோவிச் 6-1, 6-1, 6-1 என நேர் செட்களில் சோசாவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

9ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான குரோஷியாவின் மரீன் சிலிச், அர்ஜென்டினாவின் பெல்லாவை எதிர் கொண்டார். முதல் செட்டில் பெல்லாவின் சர்வீஸ் கேமை முறியடித்து செட்டை கைப்பற்றினார் சிலிச். ஆனால், அடுத்த 2 செட்களிலும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினார் பெல்லா. இதனால் கடைசி 2 செட்களையும் டை பிரேக்கர் முறையில் சிலிச் கைப்பற்றினார். சிலிச் 6-3, 7-6(3), 7-6(3) என்ற செட்களில் வெற்றி பெற்றார்.கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான 4ம் நிலை வீரர் ஜப்பானின் நிஷிகோரி, பிரான்ஸ் வீரர் பாய்ரேவை எதிர் கொண்டார். நிஷிகோரி எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாய்ரே அசத்தலாக ஆடி நிஷிகோரியை திணற அடித்தார். முதல் செட்டில் நிஷிகோரியின் சர்வீஸ் கேமை முறியடித்து செட்டை கைப்பற்றினார் பாய்ரே. சுதாரித்து ஆடிய நிஷிகோரி அடுத்த 2 செட்களையும் வென்றார்.

நான்காவது செட்டை, டை பிரேக்கரில் வென்றார் பாய்ரே. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் அதிரடியை வெளிப்படுத்திய பாய்ரே, நிஷிகோரியின் சர்வீஸ் கேமை முறியடித்து செட்டை கைப்பற்றினார். மாரத்தான் போட்டியாக அமைந்த இதில் பாய்ரே 6-3, 3-6, 4-6, 7-6(6), 6-4 என ஐந்து செட்களில் போராடி நிஷிகோரியை வீழ்த்தினார். உக்ரேன் வீரர் மார்சென்கோ, அமெரிக்க வீரர் மார்டி பிஷ், ஸ்பெயினின் டேவிட் பெரர், கனடாவின் மிலாஸ் ரோனிக், இத்தாலி வீரர் போக்னினி, பெல்ஜிய வீரர் கோபின், ஸ்பெயினின் ரோப்ரெடோ, பிரான்ஸ் வீரர் சோங்கா ஆகியோர் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலக நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் டயட்சென்கோவை எதிர் கொண்டார்.

 21 நிமிடங்களே நீடித்த இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 2-0 என முன்னிலையில் இருந்த போது, காயத்தால் அவதிப்பட்ட டயட்சென்கோ போட்டியில் இருந்து விலகினார். இதனால் செரீனா எளிதில் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.  7ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச், ஸ்லொவாகியாவின் சிபுல்கோவாவை முதல் சுற்றில் எதிர் கொண்டார். முதல் செட்டில் இவானோவிச்சின் சர்வீஸ் கேமை முறியடித்து செட்டை கைப்பற்றினார் சிபுல்கோவா. அடுத்த செட்டில் பதிலடி கொடுத்து செட்டை வென்றார் இவானோவிச். மூன்றாவது செட்டில் சுதாரித்து ஆடி செட்டை சிபுல்கோவா கைப்பற்றினார். சிபுல்கோவா 6-3, 3-6, 6-3 என்ற செட்களில் இவானோவிச்சை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். பிரபல வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன் கீய்ஸ், லாரா டேவிஸ், யூஜினி புச்சார்டு, அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா, குஸ்னட்சோவா ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் சில
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் செரீனா-வீனஸ் சகோதரிகள் மோதல்



  • டெஸ்ட்டில் வாட்சன் ஓய்வு: ஸ்மித் கருத்து



  • பாக். வீரர்கள் ஒப்பந்தபட்டியல் உமர் குல் அதிரடி நீக்கம்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் நான்காம் சுற்றில் செரீனா, ஜோகோவிச்



  • இங்கி.க்கு எதிரான முதல் ஒன் டே ஆஸ்திரேலியா சூப்பர் வெற்றி



  • உடல் ஊனமுற்றோருக்கான டி20 தொடர் இங்கிலாந்து டிரெஸ்சிங் ரூமிற்கு மோர்டசா திடீர் விஜயம்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மூன்றாம் சுற்றில் பெடரர், முர்ரே



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்



  • இங்கி. - ஆஸி. இடையே இன்று முதல் ஒன் டே



  • ஆசிய குத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் சதீஷ்குமார்



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]