ரோகித் சர்மா அரைசதம் இந்தியா முன்னிலை
8/31/2015 3:14:48 PM
கொழும்பு: இந்தியா- இலங்கை அணிகள் இடையே கடைசி டெஸ்ட், கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 312 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 201 ரன்னில் சுருண்டது. இந்திய வீரர் இசாந்த் சர்மா 5 விக்கெட் சாய்த்தார். 111 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 21ரன் எடுத்திருந்தது. கேப்டன் கோஹ்லி, ரோகித்சர்மா 4வது நாள் ஆட்டத்தை இன்று துவங்கினர்.ஸ்கோர் 64 ரன்னாக இருந்தபோது கோஹ்லி 21 ரன்னில் பிரதீப் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து பின்னி களம் இறங்கினார். மறுபுறம் பொறுமையாகவும், அதே நேரத்தில் நல்ல பந்துகளை அடித்தும் ஆடிய ரோகித்சர்மா அரைசதம் (50ரன்) எடுத்த நிலையில் பிரசாத் பந்தில் கேட்ச் ஆனார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்திருந்தது. பின்னி 38, நமன் ஓஜா 11 ரன்னில் களத்தில் இருந்தனர். 5 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி 243 ரன் முன்னிலை பெற்றுள்ளது.