இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி

8/22/2015 11:58:50 AM
பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச் மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு

புதுடெல்லி: அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.தேசிய படை முன்னாள் கமாண்டோவும், தற்போது ஆம் ஆத்மி எம்எல்வுமாகவும் இருப்பவர் சுரேந்தர் சிங். இந்த மாத தொடக்கத்தில் 4ம் தேதி டெல்லி முனிசிபல் ஊழியர்கள் சிலர் வழக்கமான ஆக்கிரமிப்பு சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுரேந்தர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து  சுகாதார ஆய்வாளர் ஆர்.ஜே. மீனா என்பவர் கொடுத்த புகாரில், முனிசிபல் ஊழியர் முகேஷ் என்பவரை சுரேந்திர சிங் மற்றும் அவரது ஆதராவாளர்கள் அடித்து உதைத்ததுடன் சாதியை சொல்லியும் திட்டினர் என்று தெரிவித்திருந்தார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி முன் ஜாமீன் கேட்டு சுரேந்திர சிங் தரப்பு டெல்லி கோர்ட்டில் மனு செய்திருந்தனர். சுரேந்திர சிங்குக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று டெல்லி போலீசார் சுரேந்திர சிங்கை கைது செய்தனர்.

இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டில் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்யும் மத்திய மோடி அரசு, மும்பை தாக்குதலின் போது தேசத்திற்காக போராடி தீவிரவாதிகளின் தோட்டக்களை உடலில் தாங்கி பாடுபட்ட கமாண்டோ வீரர் சுரேந்திர சிங்கை கைது செய்துள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுரேந்திர சிங் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சாதி பெயரை சொல்லி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசாரால் கைது செய்யப்படும் 3வது ஆம் ஆத்மி எம்எல்ஏ சுரேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பெண் அதிகாரி அவமதிப்பால் விவசாயி தற்கொலை: போலீசார் வழக்கு பதிவு



  • அசாமில் கனமழை: 6 லட்சம் பேர் பாதிப்பு



  • புனே திரைப்பட கல்லூரி விவகாரம்: மாணவர்களுடன் மத்திய குழு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்



  • திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி விழாவில் ஜீப் மோதி படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு: 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு



  • ஆந்திராவில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது : நடிகை ரோஜா குற்றசாட்டு



  • பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தால் பேச்சு வார்த்தையை ரத்து செய்வோம் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை



  • அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக



  • ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு மோடியை சந்திக்க சகோதரி விருப்பம் : ராக்கியை தபாலில் அனுப்பினார்



  • மாநிலங்களை ஏலம் விடும் பிரதமர் மோடி காங்கிரஸ் கடும் தாக்கு



  • பீகாருக்கு ரூ. 1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி அறிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக பிராந்திய கட்சிகள் போர்க்கொடி



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]