இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஷஸ் கடைசி டெஸ்ட்; 107/8; பரிதாப நிலையில் இங்கிலாந்து

8/22/2015 11:57:57 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

ஓவல்:  இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 79.4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன் எடுத்திருந்தது.ஸ்டீவ் ஸ்மித் 78 ரன், வோக்ஸ் 47 ரன்னுடன் களத்தில் இருந்தனர் நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்மித்-வோக்ஸ் ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த வோக்ஸ் 76 ரன் எடுத்த போது ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நங்கூரமாக நின்ற ஸ்மித் சதம் விளாசினார். இந்த ஆண்டில் அவர் அடிக்கும் 4வது சதம் இது. மார்ஷ் 3, நேவல் 18, ஜான்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற ஸ்மித் 143 ரன்னில் பின் பந்தில் போல்டானார். 9வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய ஸ்டார்க் 52 பந்தில் 58 ரன் குவிக்க, ஆஸ்திரேலியா 125.1 ஓவரில் 481 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கி. தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர், இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் குக் 22 ரன்னில் (21 பந்து) லியான் பந்தில் போல்டானார். மற்றொரு துவக்க வீரர் லைத்(19) பீட்டர் சிடில் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த பெல் (10), ரூட் (6), ஸ்டோக்ஸ் (15), பட்லர் (1) பிராட் (0) என வரிசையாக நடையை கட்டினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 107 ரன் எடுத்திருந்தது. மொயின் அலி, வுட் தலா 8 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லியான், பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி உள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் சில
  • பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்



  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]