கூவத்தை சுத்தம் செய்ய பார்த்திபன் முடிவு
8/22/2015 11:56:42 AM
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் வசித்து வந்த பார்த்திபன் தற்போது புறநகர் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டார். சமீபத்தில் ‘மய்யம்’ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் கூவத்தை சுத்தப்படுத்தப்போவதாக கூறி ஷாக் கொடுத்தார்.அவர் கூறியது: சென்னைக்கு அடுத்துள்ள தோட்ட வீட்டில் வாழ்கிறேன். அங்கேயே இயற்கை உரங்களை பயன்படுத்தி தேவையான காய்கறிகளை வளர்க்கிறேன்.அதற்கு இயற்கை உரம் பயன்படுத்துகிறேன். மாட்டு சாணத்திலிருந்தும், மக்கிய இலைகளையும் குழியில் புதைத்துவைத்து நானே உரம் தயாரிக்கிறேன். அசுத்தமான கழிவிலிருந்துதான் சத்தான உரம் கிடைக்கிறது. கூவத்திலும் அசுத்தம் படிந்திருக்கிறது. அதன் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்க முடியுமா என்று பெரியவர் ஒருவரிடம் கேட்டபோது முடியும் என்றார். அங்கிருந்து கழிவுகளை லாரியில் அள்ளிவந்து உரம் தயாரிக்க எண்ணி சென்னை மேயரை தொடர்புகொண்டேன். அவர் சி.எம். விழாவில் இருப்பதாக கூறினார்கள். விரைவில் அவரிடம் அனுமதி பெறுவேன். இதேபோல் மற்ற தோட்ட வீட்டில் வாழ்பவர்களும் இதுபோல் செய்ய முன்வந்தால் சீக்கிரமே கூவம் சுத்தமாகிவிடும்.