சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதலன் எடுக்கும் படம்
8/22/2015 11:55:34 AM
80களில் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தார். திடீரென்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடித்து பிரபலம் ஆனார். தற்போது சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதல் வாழ்க்கைபற்றிய கதை படமாக உள்ளது. அதை அந்த காதலனே இயக்க உள்ளார். கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் சில்க் ஸ்மிதாவுடன் நெருக்கமான பழக்கம் கொண்டவர். அவரை நேசித்தும் வந்தார். அவர்தான் சிலுக்குடன் தனது காதல் அனுபவம்பற்றி படமாக்க உள்ளார். அத்துடன் தான் நேசித்த சில ஹீரோயின்கள் பற்றியும் இக்கதையில் இணைத்து படமாக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்துக்கு இளையராஜாவிடம் இசை அமைக்க கேட்க எண்ணி உள்ளார். சமீபத்தில் இதுதொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்து பேசினார்.