இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் சொத்து ஆவணம் பறிமுதல்: 4 பேரும் சேலம் சிறைக்கு மாற்றம்

8/21/2015 3:23:34 PM
100 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியல் செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்படும் பெண் டாக்டர் கொலை இன்ஜினியரிங் மாணவர் கைது: ஆப்பிள் போனுக்காக கொலை செய்தது அம்பலம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி ராமாபுரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம  கும்பல் ரூ.12 கோடி மதிப்புள்ள 6000 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க, 10 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், வங்கி  கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாநவாஸ் (49), அப்ரர் (27), ஷேக் அலிகான்(53) ஆகிய மூன்று பேரையும் ஏற்கனவே  போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து அரை கிலோ தங்கம் மற்றும் ரூ.45 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்துள்ளதாக அப்போது போலீசார் தெரிவித்தனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 6 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர்களில் நான்கு பேர் டெல்லி சராய்கலேகான் பஸ் நிலையம்  அருகே இருப்பதாக கடந்த 14ம் தேதி இரவு 10.30 மணியளவில் தனிப்படை போலீசாருக்கு, டெல்லி உளவுப்பிரிவினர் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி சந்தானபாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று நான்கு பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  அவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலம் சாதிக்அலிகான் (32), பஹீம் (எ)பாடா (29), யூசூப்(29), அசார்அலி(36) என்பது தெரியவந்தது.இவர்களை போலீசார்  கைது செய்து கிருஷ்ணகிரி நடுவர் நீதிமன்றம் எண்2-ல் மாஜிஸ்திரேட்  ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கொள்ளையர் 4 பேரையும் வரும் 3ம் தேதி  வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்று ஓசூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். இன்று காலை  அவர்கள் 4 பேரையும் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்று அடைத்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட 4  பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ. 25  லட்சம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் 3 பேரையும் விரைவில் பிடித்து  விடுவோம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சில
  • பெண் டாக்டர் கொலை இன்ஜினியரிங் மாணவர் கைது: ஆப்பிள் போனுக்காக கொலை செய்தது அம்பலம்



  • தொழிலதிபர் மகனை கடத்தி கொலை



  • பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது



  • அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை



  • ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது



  • கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது



  • கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்



  • சிறுமி சில்மிஷம் : வாலிபர் கைது



  • பல்லாவரத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை மருந்து பிரதிநிதி கைது



  • மின்சார கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு: ஐகோர்ட் முடித்து வைத்தது



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]