இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்

8/21/2015 3:21:11 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

சென்னை: கஞ்சா வாங்கி வராததால் 7 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதுசம்பந்தமாக 2 சிறுவர்கள் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் நொச்சி  நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவரது 7 வயது மகன் லோகேஷ். 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை 6 மணிக்கு வெளியே சென்றவன் மீண்டும் வீடு  திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார்  அளித்தனர். சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஷியாம் வின்சென்ட் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்நிலையில், நேற்று இரவு சதீஸ் வீட்டு அருகே  உள்ள கழிவறையில் லோகேஷ் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று லோகேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லோகேசின் பின்னந் தலையில் காயம் இருந்தது. கயிறு மூலம் கழுத்தும் இறுக்கப்பட்டுள்ளது. எனவே, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.   இதுபற்றி இன்றும் மீண்டும் விசாரணை தொடங்கியது.இதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.  சிறுவன் கொலை நடந்த அன்று 2 பேரும் லோகேசிடம் பணம் கொடுத்து கஞ்சா வாங்கி வரச்சொல்லி உள்ளனர். இதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளான்.  அத்துடன் இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளான். இதனால், விரக்தி அடைந்த 2 பேரும் சேர்ந்து லோகேசை அடித்து கொலை செய்துள்ளனர் என்று  தெரியவந்துள்ளது.இதில் சம்பந்தப்பட்ட 2 சிறுவர்கள் சிக்கி உள்ளனர். ஒரு சிறுவனை தேடி வருகின்றனர். 

மேலும் சில
  • பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது



  • அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை



  • ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது



  • கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது



  • கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் சொத்து ஆவணம் பறிமுதல்: 4 பேரும் சேலம் சிறைக்கு மாற்றம்



  • சிறுமி சில்மிஷம் : வாலிபர் கைது



  • பல்லாவரத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை மருந்து பிரதிநிதி கைது



  • மின்சார கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு: ஐகோர்ட் முடித்து வைத்தது



  • கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்தனர் திருச்சி காங். ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதல்: எம்.பி உள்பட 150 பேர் கைது



  • ரூ. 3 லட்சம் முறைகேடு மாவட்ட மைய நூலக ஊழியர் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]