இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்தனர் திருச்சி காங். ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதல்: எம்.பி உள்பட 150 பேர் கைது

8/21/2015 3:18:01 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

திருச்சி: முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து திருச்சி காங்கிரஸ்  ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பிரதமர் மோடி-முதல்வர்  ஜெயலலிதா சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியததாக கூறி, அவரை கண்டித்து தமிழகம் முழுவதும்  அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றத்தை  அதிமுகவினர் முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியாயின.இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அலுவலகத்தை காங்கிரசார் பூட்டிவிட்டனர். ஆயுதப்படை  போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேலும் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அவைத் தலைவர் வெல்லமண்டி நடராஜன், எம்பி குமார் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அருணாசல மன்றத்தை நோக்கி  ஆவேசமாக கோஷங்களை முழங்கியபடி வந்தனர்.அவர்கள் மெயின் கார்டு கேட்டில் இருந்தும், கோகினூர் தியேட்டர் அருகில் இருந்தும் இருபிரிவாக வந்தனர்.  உள்ளே நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.இந்நிலையில் அதிமுகவினர் அருணாசல மன்றம் மீது சரமாரியாக கற்களை வீசினர். மேலும் இரும்பு தடியாலும் அடித்தனர். இதனால் கட்டிடத்தின் முன்பக்க  கண்ணாடிகள் உடைந்து சிதறின.

வாசலில் இருந்த பிளக்ஸ் போர்டுகளும் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் போக்்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியே போர்க்களம் போல் ஆனது.  இதையடுத்து எம்பி குமார், வெல்லமண்டி நடராஜன் உள்பட 150க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் சில
  • பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது



  • அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை



  • ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது



  • கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது



  • கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் சொத்து ஆவணம் பறிமுதல்: 4 பேரும் சேலம் சிறைக்கு மாற்றம்



  • கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்



  • சிறுமி சில்மிஷம் : வாலிபர் கைது



  • பல்லாவரத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை மருந்து பிரதிநிதி கைது



  • மின்சார கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு: ஐகோர்ட் முடித்து வைத்தது



  • ரூ. 3 லட்சம் முறைகேடு மாவட்ட மைய நூலக ஊழியர் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]