இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

8/21/2015 2:27:04 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

சின்சினாட்டி:  நோவாக் ஜோகோவிச் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஹார்டுகோர்ட் டென்னிஸ் தொடரில் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நேற்றிரவு நடந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், 14ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர் கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச்சும், இரண்டாவது செட்டை கோபினும் வென்றனர். மூன்றாவது செட்டின் துவக்கம் ஜோகோவிச்சுக்கு சாதகமாக அமையவில்லை. ஜோகோவிச்சின் 2 சர்வீஸ் கேம்களை கோபின் முறியடித்து 3-0 என முன்னிலை பெற்றார். தனது சர்வீஸ் கேமை இழந்த ஆத்திரத்தில் ஜோகோவிச், கையில் இருந்த ராக்கெட்டை தரையில் அடித்தார். இதில் ராக்கெட் உடைந்தது. மாற்று ராக்கெட்டுடன் களமிறங்கிய ஜோகோவிச், பின்னர் நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பியதை கோபினால் தடுக்க முடியாமல் போனது. தொடர்ந்து 6 கேம்களை வென்ற ஜோகோவிச் கடைசி செட்டை கைப்பற்றினார். ஜோகோவிச் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் இதுவரை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. இந்த முறை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்று, அனைத்து 9 ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையை படைக்க ஜோகோவிச் தீவிரமாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 5ம் நிலை வீரரான சுவிட்ஜர்லாந்தின் வாவ்ரிங்கா, குரேஷியாவின் இவா கார்லோவிக்கை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 6-7(2), 7-6(5), 7-6(5) என மூன்று செட்களில் கார்லோவிக்ைக போராடி வென்றார். இந்த ஆட்டத்தில் கார்லோவிக் 35 ஏஸ் சர்வீஸ்களை வீசி அசத்திய போதும், அதனை சமாளித்து வாவ்ரிக்கா வெற்றிக்கனியைப் பறித்தார். காலிறுதியில் வாவ்ரிங்கா, ஜோகோவிச்சை எதிர் கொள்ள உள்ளார்.தகுதி நிலை வீரரான அலெக்சாண்டர் டொல்கோபோலோவ் 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்சி ஜானோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதற்கு முன்பு 4 முறை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள டொல்கோபோலோவ் முதல் சுற்றைக் கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரீன் நாப்பை எதிர் கொண்டார். முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அனைத்து கேம்களையும் வென்றார் செரீனா. கரீன் நாப்பை 6-0, 6-2 என்ற கேம் கணக்கில் 54 நிமிடங்களில் செரீனா தோற்கடித்தார். தொடர்ச்சியாக முதல் 9 கேம்களை வென்ற செரீனா, இதில் 12 புள்ளிகளை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது. சுவிட்ஜர்லாந்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக், 7ம் நிலை வீராங்கனையான லூசி சபரோவாவை எதிர்த்து ஆடினார். சபரோவாவிடம் முதல் செட்டை இழந்த பென்சிக், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து  வெளியேறினார். 6ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிக் 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார். உக்ரேன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச், ஸ்லொவாகியாவின் அன்னா கரோலினா ஷ்மிட்லோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்தாசியா பாவ்லுசென்கோவா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட்; 107/8; பரிதாப நிலையில் இங்கிலாந்து



  • பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்



  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]