திருவள்ளூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைச்சர்கள் ஆய்வு
8/21/2015 2:14:32 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது. இவற்றை அமைச்சர்கள் எஸ்.சுந்தர்ராஜ், பி.வி.ரமணா, எஸ்.அப்துல்ரகீம் மற்றும் கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது இறகு பந்து உள்விளையாட்டரங்க கட்டுமான பணிகளையும், நீச்சல் குளத்தில் நீர் சுத்திகரிப்பு அழகு, சுற்றுச்சுவர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக விளையாட்டு விடுதி ஆகியவை அமைப்பது, பழுதடைந்த நிலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சீரமைப்பது, தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பா.ரவிச்சந்திரன், கவுன்சிலர் வெங்கட்ரமணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் நந்தகுமார், தாசில்தார் கணேஷ்சிங் உட்பட பலர் இருந்தனர்.