இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்

8/19/2015 3:31:21 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் நாளை நடக்கிறது மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக

சின்சினாட்டி: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு 2ம் சுற்றுப்போட்டி நடந்தன. இதில், 2ம் நிலை வீரரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா அகுட்டை  6-4, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி 3ம் சுற்றில் அடியெடுத்து வைத்தார்.7ம் நிலை வீரரான குரோஷியாவின் மரீன் சிலிச், போர்ச்சுகல் வீரர் ஜோ சோசாவை 6-4, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.16ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், தகுதிச் சுற்று வீரரான வாசெக் போஸ்பிசிலுடன் மோதினார். இதில் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6(4), 7-6(5) என நேர் செட்களில் போஸ்பிசிலை போராடி வென்றார்.தகுதி நிலை வீரரான உக்ரேன் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் டொல்கோபோலோவ், ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டாமிக்கை எதிர் கொண்டார்.

இதில் டொல்கோபோலோவ் 6-4, 6-1 என நேர் செட்களில் வென்றார்.மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவரோவை எதிர் கொண்டார். இதில்  ஸ்டீபன்ஸ், 6-1, 6-2 என நேர் செட்களில் வென்று 2ம் சுற்றில் நுழைந்தார். கனடாவில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றவரான சுவிட்ஜர்லாந்தின் பெலிண்டா பென்சிக், 11ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலீக் கெர்பரை எதிர் கொண்டார். இதில் பெலிண்டா பென்சிக், 7-5, 6-3 என்ற செட்களில்வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.ஸ்லொவாகியாவின் அன்னா கரோலினா, ரஷ்ய வீராங்கனை டாரியா காவ்ரிலோவா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்கா ஆகியோரும் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.வீனஸ், ஷரபோவா விலகல்வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், 2ம் சுற்றில் ஆடாமல் விலகினார். இதனால் அவரை எதிர்த்து ஆடவிருந்த அனா இவானோவிக் நேரடியாக 3ம் சுற்றுக்கு முன்னேறினார். ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியதால் அவரை எதிர்த்து ஆடவிருந்த லெப்சென்கோ நேரடியாக 3ம் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



  • உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்கிறார் சாய்னா



  • உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்



Facebook

Twitter

சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]