இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?

8/18/2015 2:44:43 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் நாளை நடக்கிறது மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக

காலே:  காலேவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணியின் தோல்வி யாரும் எதிர்பாராதது. 2வது இன்னிங்சில், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால், அதிர்ச்சி தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. இதில், அதிக விமர்சனங்களை சந்தித்திருப்பது ரோகித் சர்மா. தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அணியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் அவர் 3வது வீரராக களமிறங்குவது சரியா? என்ற கேள்விக்கணைகளும் தொடுக்கப்பட்டு வருகின்றன. ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து 9 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் கடந்த 2013ம் ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்டுகளில், 21 இன்னிங்சுகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 681 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் தனது முதல் இரண்டு இன்னிங்சுகளிலும், சதம் விளாசிய ரோகித் சர்மா, அதன் பின் 19 இன்னிங்சுகளில் 2 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.
 
மேலும் காலேவில் நடந்த முதல் டெஸ்டில், முதல் 2 இன்னிங்சுகளிலும் முறையே 9 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். ரோகித் சர்மாவிற்கு வருத்தமளிக்கும் மற்றொரு புள்ளி விபரம் என்னவென்றால், இலங்கை மண்ணில் 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 281 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் தடுப்பு சுவர் என போற்றப்படும் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, 3வது வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாராவுக்கு, ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் ரோகித் சர்மாவை நீக்கி விட்டு, புஜாராவை அணியில் சேர்க்கலாம் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. அதே சமயம் இலங்கையுடன் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் ரோகித் சர்மா சேர்க்கப்படலாம் எனவும், அவர் தொடர்ந்து 3வது வரிசையில் களமிறங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முதலாவது, புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராத் கோஹ்லி, புதிய திட்டங்களுடன் அணியை கட்டமைப்பதற்கான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக, அவருக்கு வாய்ப்பு அளிக்கலாம். இரண்டாவது, ஒரு தொடர் முழுவதும் நிலையான இடத்தில் விளையாடும்போது, அணியின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு, ரோகித் சர்மா தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என விராத் கோஹ்லி கருதுவதுதான். ரோகித் சர்மா இதை செய்தால் நன்றாகதான் இருக்கும். இந்தியா-இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் வரும் 20ம் தேதி. கொழும்புவில் துவங்குகிறது. 

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்கிறார் சாய்னா



  • உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்



Facebook

Twitter

சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]