இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

பாம்புகள் ஜாக்கிரதை!

7/20/2015 2:11:58 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

ரவீந்தர் குமாருக்கு 24 வயது. டெல்லி போலீஸ் விசாரித்தபோது, கண் சிமிட்டவும் இல்லை. கலங்கவும் இல்லை. குறைந்தபட்சம் 15 பேரையாவது கொன்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர், சிறுமிகள். இவனைப் பற்றிய நிஜங்கள் சுடுகின்றன.அனைத்தும் பலாத்காரக் கொலைகள். கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டிடத்தில், ஒரு சிறுமியைக் கொன்று பதுங்கியிருந்த அவனைச் சுற்றிவளைத்தது போலீஸ். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசப் போலீசாரால் 6 ஆண்டு காலமாக ரவீந்தர் தேடப்பட்டு வந்திருக்கிறான்.தனியாக இருக்கும் சிறுமிகள் மட்டுமல்ல; சிறுவர்களையும் இவன் விட்டு வைக்கவில்லை. ‘சிறுவர், சிறுமிகளைக் கடத்தும்போது அழுவார்கள் அல்லது சத்தம் போடுவார்கள். அவர்களது வாயை அமுக்கி மூச்சுத்திணறச் செய்து  சத்தத்தை ஓய வைத்துவிடுவான். பெரும்பாலும் அவர்கள் இறந்துவிடுவார்கள். பொதுவாக அவன் இறந்த உடல்கள் மீது தான் வன்புணர்ச்சியைக் காட்டியிருக்கிறான்’ என்று போலீசார் கூறுகின்றனர்.

எந்தெந்தச் சிறுவர், சிறுமிகளை இவன் கொன்றிருக்கிறான் என்று பட்டியலிடுவது போலீசுக்குச் சிரமம்தான். ஏனெனில், 2012ல் தொழிலாளி ஒருவரின் மகளைக் கடத்திக் கொன்றிருக்கிறான். ஆனால், தொழிலாளர்கள் போலீசுக்குத் தெரிவிக்காமலே சிறுமியை அடக்கம் செய்துவிட்டனர்.‘பணம் இருந்தால் சிறுவர், சிறுமிகளைத் தேடி நான் ஏன் போகிறேன்? சிறுவர், சிறுமிகள்னா ரொம்ப ஈசி... நினைத்த நேரத்துக்குக் கதையை முடிக்கலாம்’ என்று அப்பாவி போல் கூறுகிறான் இந்தக் காமக்கொடூரன். ‘பாலியல் வெறிக்கு ஏழ்மையைக் காரணமாக்குகிறான். அவன் சொல்வதைப் பார்த்தால் கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அவனுக்கே கூட அடையாளம் மறந்து போயிருக்கும் அளவு, கொலைகள் இயல்பாகியிருக்கின்றன’ என்று கூறுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

பெற்றோரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிறுவர், சிறுமிகள் இருக்க வேண்டும். பாலியல் சீண்டல்களைப் புரிந்துகொள்ளும் அறிவு, சிறுவர், சிறுமிகளுக்குத் தேவை. தொடுதல் உணர்வில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இதை உணர்த்த வேண்டிய கடமை, பெற்றோரைச் சார்ந்ததுதான். அறிமுகமான, அறிமுகம் இல்லாத நபர்கள் என்றாலும், குழந்தைகள் யாரிடம் பழகுகிறார்கள், குழந்தைகளிடம் யார் பழகுகிறார்கள் என்பது குறித்து பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ஏழைச் சிறுவர், சிறுமிகள்தான் காமக்கொடூரங்களுக்கு அதிகளவில் இரையாகின்றனர்.சிறுவர், சிறுமிகள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவது குறித்த விழிப்புணர்வு பெற்றோரிடம் மிகவும் குறைவுதான். இதில், சிறுவர், சிறுமிகளின் கல்வியில் அக்கறை காட்டும் மேல்தட்டு, நடுத்தர வர்க்கப் பெற்றோரும் விதிவிலக்கல்ல.  அனைத்தும் கரையான் புற்றுகள் அல்ல. எந்தப் புற்றிலும் எந்தப் பாம்பும் இருக்கலாம்.

மேலும் சில
  • சாட்சி சொல்லாத மாடுகள்



  • சுதந்திரக் காற்று



  • டிரைவரின் கண்ணியம்



  • குளிர்வித்த சாதனை



  • ஆசைக்கு ஒரு போட்டோ



  • அறவழி இயற்கை வழி



  • பயணங்கள் முடிவதில்லை



  • சூது கவ்வக்கூடாது



  • மெல்லிசை ஓய்ந்தது



  • விம்பிள்டன் முத்தாய்ப்பு



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]