இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

ஆசைக்கு ஒரு போட்டோ

7/18/2015 12:01:18 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

செல்போன் யுகத்தில், யார் வேண்டுமானாலும் போட்டோ, வீடியோவாகச் சுட்டுத்தள்ளுகிறார்கள். எதுவாக இருந்தாலும் காட்சியாகப் பார்ப்பதில் அலாதி சுகம். காட்சிகள் பல நேரங்களில் எழுதாத கவிதைகள்.மெரின் ஜோசப் இப்படி ஒரு பஞ்சாயத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா துணை போலீஸ் கண்காணிப்பாளர். எர்ணாகுளத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹைபி ஈடன் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நடிகர் நிவின் பாலி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மலையாளத்தில் சக்கைப்போடு போடும் ‘பிரேமம்’ படத்தின் கதாநாயகன். (தமிழில் ‘நேரம்’ படத்தின் கதாநாயகனும் இவர்தான்). நிவினுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பிய மெரின், எம்எல்ஏ ஹைபி ஈடனிடம் தனது செல்போனைக் கொடுத்து எடுக்கச் சொன்னார். அடுத்த நாள், மலையாள பத்திரிகையில் நிவின் - மெரின் படம் வெளியானது.

கதாநாயகர்களுடன் இளம் விசிறிகள் போட்டோ எடுத்துக்கொள்வது வழக்கமானதுதான். மெரின் இளம்பெண் என்றபோதிலும், ஐபிஎஸ் அதிகாரி என்பதால், இந்தப்படம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. போட்டோ வெளியானதும், உயரதிகாரிகள் மெரினைக் கண்டித்திருக்கின்றனர்.ஆனால், மெரின் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். பேஸ்புக்கில், ‘எம்எல்ஏ நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு அளிக்கச் செல்லவில்லை. நிவினுடன் போட்டோ எடுத்துக்கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. போலீஸ் அதிகாரிகளுக்கான நடத்தை விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

நவீன காலத்தில் அதிகாரிகள் உள்பட முக்கியப் பிரமுகர்களின் நடவடிக்கைகள் உற்றுக் கவனிக்கப்படுகின்றன. சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு விடுகின்றன. லஞ்ச ஊழல், முறைகேடுகள் கூட இவற்றின் மூலம் அம்பலமாகியிருக்கின்றன. அதேசமயம், பயன் இல்லாத காலத்தை வீணடிக்கும் சர்ச்சைகளும் உருவாகின்றன.திரைப்பட நடிகர், நடிகைகள் மீது, சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமல்ல; அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பிரபலங்களுக்குக் கூட, ஈர்ப்பு இருக்கிறது. நடிகர், நடிகைகளுக்குத் தன்னை யாரென்றே தெரியாவிட்டாலும், அவர்களே விரும்பாவிட்டாலும், அவர்களுடன் சேர்ந்து படம் எடுத்துக்கொண்டு ஜம்பம், பந்தா காட்டும் ரசிக சிகாமணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நிவின் - மெரின் போட்டோ அந்த ரகம் அல்ல. இருந்தாலும், அது திரைப்பட ஈர்ப்பின் வெளிப்பாடு. நிழல்கள் நிஜமாவதில்லை. ஆசைக்கு ஒரு போட்டோ எடுத்து அல்லல்பட வேண்டாமே!

மேலும் சில
  • சாட்சி சொல்லாத மாடுகள்



  • சுதந்திரக் காற்று



  • டிரைவரின் கண்ணியம்



  • குளிர்வித்த சாதனை



  • பாம்புகள் ஜாக்கிரதை!



  • அறவழி இயற்கை வழி



  • பயணங்கள் முடிவதில்லை



  • சூது கவ்வக்கூடாது



  • மெல்லிசை ஓய்ந்தது



  • விம்பிள்டன் முத்தாய்ப்பு



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]