தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒரே கட்டணம் நிர்ணயம் தமாகா வலியுறுத்தல்
6/11/2025 3:21:51 PM
சென்னை: தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை:தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தமிழக அரசு காண வேண்டுமென்றால் மருத்துவம், பொறியியல், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் உள்ளது போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் பொதுவான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், தமிழகத்தில் மாவட்டத்தில் உள்ள தலைநகரத்தில் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்லூரிகள் போல் சிறந்த பள்ளிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வியை பெற முடியும்.இவ்வாறு கூறியுள்ளார்.