துறையூர் பகுதியில் 2 சிறுத்தைகள் உலா
6/11/2025 2:47:00 PM
துறையூர்: திருச்சி, துறையூர் கோவிந்தாபுரம் தனியார் பள்ளி அருகில் சிறுத்தை ஒன்று ரோட்டை கடந்து செல்வதை, அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் நேற்றிரவு கணேசன் வீட்டு கதவை சிறுத்தை பிறாண்டி உள்ளது. சத்தம் கேட்டு கணேசனும், அவரது மனைவியும் கூச்சல் போடவே அந்த சிறுத்தை ஓடிவிட்டது. பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை, கணேசனுக்கு சொந்தமான பட்டிக்குள் புகுந்து இரண்டு மாடுகளை கடித்து குதறி உள்ளது. இதனால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.