இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

431 பேரை பலி கொண்ட சீன கப்பல் விபத்து குறித்த விசாரணை தொடங்கியது

6/11/2025 2:44:02 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கப்பல் கவிழ்ந்து 431 பேர் உயிரிழந்த விபத்து குறித்த விசாரணை தொடங்கியது. வானிலை, விபத்துக்குள்ளான கப்பலின் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.சீனாவில் கடந்த வாரம் யங்சே ஆற்றில் சென்று கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. ஊழியர்கள் உட்பட 456 பேர் இந்த கப்பலில் பயணம் செய்தனர். கப்பல் மூழ்கியதால் பெரும்பாலானோர் கப்பலின் அடியில் சிக்கிக் கொண்டனர். கப்பல் கேப்டன், தலைமை பொறியாளர் உட்பட 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.சுமார் ஒருவார போராட்டத்துக்குபின் 431 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 50 வயதை கடந்தவர்கள். அதிகம்பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தீவிர விசாரணைக்கு சீன அரசு உத்தரவிட்டது. கப்பல் விபத்துக்குள்ளானது பற்றி விசாரணை நடத்த 60 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்த சமயத்தில் வானிலையின் தன்மை, கப்பல் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தனித்தனி குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. கப்பல் விபத்துக்குள்ளான சமயத்தில், கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் ஆகியோர் தப்பி வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.எனவே, இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, கப்பல் நிறுவனம், கப்பலை தயாரித்த நிறுவனம், வடிவமைப்பாளர்கள் மற்றும் தப்பி வந்த பயணிகள் உள்ளிட்டோரிடமும் விசாரிக்கின்றனர். மேலும், விபத்தின்போது இருந்த வானிலை, ஆற்று மணலின் தன்மை போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான கப்பலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை மீட்பு படையினர் கைப்பற்றியுள்ள நிலையில், அவைகளை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.   சூறைக்காற்று வீசியதே கப்பல் கவிழ்ந்ததற்கு காரணம் என கூறப்படும் நிலையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கப்பல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து முழுவிசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

மேலும் சில
  • டிராகுலாவாக நடித்த கிறிஸ்டோபர் லீ மரணம்



  • தென்கொரியாவில் வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்



  • இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல்



  • கனமழை காரணமாக நேபாளத்தில் நிலச்சரிவு: 41 பேர் பலி: லேசான நில அதிர்வால் அச்சம்



  • தீவிரவாதத்தை ஒடுக்க ஈராக்கிற்கு கூடுதல் வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா



  • கினியா, சியராவில் மீண்டும் எபோலா உலக சுகாதார நிறுவனம் தகவல்



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 15 பேர் பலி : வீடுகளுக்கு தீ வைத்து அட்டூழியம்



  • அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்



  • கடந்த 4 ஆண்டுகளில் சிரியா உள்நாட்டு போரில் 2.30 லட்சம் பேர் பலி



  • காதலியுடன் வசித்த போதே மாடல் அழகியுடன் உல்லாசம்



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]