ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
5/16/2015 12:45:10 PM
வைகாசி பொறந்தாச்சு, கிழக்கே வரும் பாட்டு படங்களை இயக்கிய ராதாபாரதி அடுத்து ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்ற படத்தை இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியது:இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுத வெளியூர் சென்று ஒரு ஓட்டலில் தங்கினேன். அங்கு வந்த இளைஞர் செங்குட்டுவன் நண்பர்களுடன் சத்தம் போட்டபடி நடனம் ஆடினார். ஓட்டல் முதலாளி திட்டுவார் அமைதியாக இருங்கள் என்றேன். ஓட்டலே இவர்களுடையதுதான் என கூறினார்கள். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்ததால் செங்குட்டுவனையே ஹீரோவாக இதில் நடிக்க வைத்தேன். இதில் நான் கடவுள் ராஜேந்திரன் காமெடியனாக நடித்துள்ளார். அக்ஷயா ஹீரோயின். ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு. ஸ்ரீ காந்த் தேவா இசை.இவ்வாறு இயக்குனர் ராதாபாரதி கூறினார்.