பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்
5/16/2015 12:40:42 PM
நாமக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது கண்டனத்துக்குரியதாகும். மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா ஆட்சியின் செயல்பாடு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட மோசமாக உள்ளது.தற்போது, டீசல் லிட்டருக்கு ரூ2.71ம், பெட்ரோலுக்கு ரூ 3.13ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும். டீசல் விலை உயர்வின் மூலம் மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இவ்வாறு மாநில சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்துள்ளார்.