இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மணப்பெண் மறுத்ததால் திருமணம் நின்றது : உறவுக்கார பெண்ணை மணந்தார் மாப்பிள்ளை : தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு

5/16/2015 12:36:52 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

தூத்துக்குடி: திருமணம் செய்துகொள்ள மணப்பெண் மறுத்துவிட்டதால் உறவுக்கார பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார்.தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் ஞானராஜ். இவரது மகன் சுரேஷ்(29). இவர் தூத்துக்குடியில் ஆண்கள் அழகு நிலையம் நடத்துகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் உறவினர்கள் அங்கு திரண்டனர்.

 திருமண சடங்குகள் நடந்த நிலையில் தேவாலயத்தில் திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார் மணப்பெண்ணிடம் ‘’ சுரேஷை திருமணம் செய்து கொள்ள சம்மதமா’’ என கேட்டார். அதற்கு மணப்பெண், ‘’ இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை’’ என்றார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து திருமணம் நின்றது. இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த மண்டபத்திற்கு வந்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் தடைபட்ட திருமணத்தை குறித்த நாளில் நடத்தி முடிக்க மணமகன் குடும்பத்தினர் நினைத்தனர். நட்டாத்தியில் வசிக்கும் சுரேஷின் உறவுக்கார பெண் கவிதாவை அவருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதையடுத்து கவிதா மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு அழைத்துவரப்பட்டார். உறவினர்கள் முன்னிலையில் மாலை மற்றும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சுரேஷ், கவிதா திருமணம் நடந்தது.

மேலும் சில
  • டாஸ்மாக் கடை அகற்றாதது ஏன்? புதுகை கலெக்டர் பதில் சொல்ல வேண்டும் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆவேசம்



  • ஆயுத போராட்டம் வெல்லும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் கோஷத்தால் பரபரப்பு



  • ஆவடி அருகே பரிதாபம் : ரயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி



  • பல்வேறு கட்சியில் இருந்து விலகி 200 பேர் புரட்சி பாரதத்தில் சேர்ந்தனர்



  • கூடுவாஞ்சேரியில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி



  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரளா மனு



  • வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்



  • டெல்டாவில் ஒரு வாரமாக அடை மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் : கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம்



  • பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி : பொருட்கள் விலை உயர்கிறது



  • சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம் : இன்று முன்பதிவு துவங்கியது



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]