பல்வேறு கட்சியில் இருந்து விலகி 200 பேர் புரட்சி பாரதத்தில் சேர்ந்தனர்
5/16/2015 12:34:02 PM
திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன்னிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்தனர்.கிளாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஞானிகுமார், பிரேம்குமார், சிலம்பரசன், கலைப்பிரியன், கார்த்தி, காமேஷ், மணிகண்டன், சிவா, அலெக்ஸ் உட்பட 200க்கும் மேற்பட்டோர், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ப.வில்சன் தலைமையில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.நிகழ்ச்சியின்போது மாநில நிர்வாகிகள் ஐ.ஏழுமலை, முல்லை பலராமன், வக்கீல் கே.எம்.தர், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன் மற்றும் சி.பி.குமார், கூடப்பாக்கம் ஜேம்ஸ், இ.குட்டி, திருப்பாச்சூர் சிவா, ஒதிகை தாமஸ், டி.எம்.சரவணன், பால்ராஜ், என்.பி.முத்துராமன், ஏ.கே.சிவராமன், ராக்கெட் ரமேஷ், லோகநாதன், வணங்காமுடி, சி.அப்பு, வேணுகோபால் உட்பட பலர் உடனிருந்தனர்.