இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரளா மனு

5/16/2015 12:31:18 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளா அரசு மனு அளித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை அதிக பலத்துடன் இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என கடந்த வருடம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திய போதிலும் அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் அணைக்கு ஆபத்து என்றும் புதிய அணை கட்டுவதுதான் பிரச்னை தீர ஒரே வழி என்றும் கேரள அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக புதிய அணை கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தில் பாறைகளுக்கான உறுதித்தன்மையை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை கேரள அரசு முடுக்கிவிட்டுள்ளது. கேரள நீர்ப்பாசனத் துறையின் கீழ் உள்ள கேரள பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பரிசோதனையை நடத்தி வருகிறது. கோவையிலுள்ள ஒரு நிறுவனம் பாறைகளை துளையிடும் பணியை செய்து வருகிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடக்கோரி தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையே முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு நேற்று ஒரு மனு அளித்துள்ளது. அந்த மனுவில், ‘’ புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறில் புதிய அணைக்காக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வு நடத்த தேசிய வனவிலங்கு வாரியம் மத்திய அரசிடம் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு கடந்த டிசம்பரில் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் சில
  • டாஸ்மாக் கடை அகற்றாதது ஏன்? புதுகை கலெக்டர் பதில் சொல்ல வேண்டும் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆவேசம்



  • ஆயுத போராட்டம் வெல்லும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் கோஷத்தால் பரபரப்பு



  • மணப்பெண் மறுத்ததால் திருமணம் நின்றது : உறவுக்கார பெண்ணை மணந்தார் மாப்பிள்ளை : தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு



  • ஆவடி அருகே பரிதாபம் : ரயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி



  • பல்வேறு கட்சியில் இருந்து விலகி 200 பேர் புரட்சி பாரதத்தில் சேர்ந்தனர்



  • கூடுவாஞ்சேரியில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி



  • வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்



  • டெல்டாவில் ஒரு வாரமாக அடை மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் : கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம்



  • பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி : பொருட்கள் விலை உயர்கிறது



  • சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம் : இன்று முன்பதிவு துவங்கியது



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]