இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யுமா ஜிம்பாப்வே அணி?

5/15/2015 2:40:35 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

ஹராரே: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்று ஜிம்பாப்வே வாரியம் கூறியுள்ள நிலையில், ஜிம்பாப்வே அணியின் பாக். சுற்றுப்பயணம் நிச்சயமற்றதாக மாறியுள்ளது. 2008ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணம் மேற்கொண்ட பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். 8 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பி்ன்னர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த நாடும் முன்வரவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான பாகிஸ்தான் வாரியம், ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற நாடுகளை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருமாறு கெஞ்சி வருகிறது. கணிசமான தொகை தருவதாக கூறியதை அடுத்து ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஒப்புக் கொண்டது. இந்த மாத இறுதியில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் வரும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக விளையாட்டு மற்றும் கேளிக்கை கமிஷனின் அறிவுரைப்படி பாகிஸ்தானில் ஜிம்பாப்வே அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஜிம்பாப்வே தரப்பிடம் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதை அடுத்து அடுத்த 16 நிமிடங்களில் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது ஜிம்பாப்வே வாரியம். அதில், ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், ஜிம்பாப்வே அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இப்போதைக்கு ரத்து செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் இந்த பிரச்னை பற்றி ஆலோசித்து வருவதாக ஜிம்பாப்வே வாரிய செய்தித் தொடர்பாளர் லவ்மோர் பாண்டா தெரிவித்தார். ஜிம்பாப்வே வாரியத்தின் மாறுபட்ட அறிக்கைகளால், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.

மேலும் சில
  • ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் நடால் தோல்வி



  • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ககன் நரங்குக்கு வெண்கலம்



  • மழைக்கு நடுவே ‘ரன் மழை’ பெங்களூர் அணி த்ரில் வெற்றி



  • ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் நடால், பெடரர்



  • பாந்த்யா அதிரடியில் வீழ்ந்தது கொல்கத்தா 5 ரன் வித்தியாசத்தில் மும்பை த்ரில் வெற்றி: ப்ளே ஆப் நம்பிக்கை நீடிப்பு



  • அமெரிக்க அணியிடமிருந்து ஒலிம்பிக் பதக்கம் பறிப்பு



  • ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; மூன்றாம் சுற்றில் பெடரர்



  • பெங்களூர் அதிர்ச்சி தோல்வி : 22 ரன் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்



  • இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஜோ ரூட் நியமனம்



  • ரோம் சர்வதேச டென்னிஸ் 3வது சுற்றில் ஜோகோவிச்



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]